தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிளும் தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் போட்டி தொடரில் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி 5-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து இந்த சுற்றுபயணத்தில் கடைசியாக 3 டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி உள்ளது இலங்கை அணி. இந்த நிலையில் டி-20 போட்டிகளில் விளையாடும் 16 பேர் கொண்ட இலங்கை அணி எற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் மலிங்கா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட புதிய அணியை அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத சரங்கா லக்மல் மீண்டும் அணிக்கு திரும்பினார். அதே போல் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இடம்பெற்ற குசால் பெரேரா மற்றும் தரங்கா டி-20 அணியில் இடம்பெறவில்லை.
டி-20 போட்டிக்கான இலங்கை அணி : லசித் மலிங்கா (கேப்டன்), நிரோஷன் டிக்குவெல்லா, அவிஷ்கா பெர்னாண்டோ, சதீரா சமரவிக்ரமா, குசால் மென்டிஸ், ஆன்ஜெலொ பெரேரா, தனஜெயா டி சில்வா, கமின்டு மென்டிஸ், பிரியாமல் பெரேரா, திசேரா பெரேரா, சரங்கா லக்மல், அகிலா தனஜெயா, இசுரு உடனா, அசிதா பெர்னாண்டோ, சடகன்.
இதை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா அணி டி-20 போட்டிக்கான அணியை அறிவித்தது. தென் ஆப்ரிக்கா அணியில் முத்த வீரர் டுமினி மீண்டும் டி-20 அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போன்று தென் ஆப்ரிக்கா அணியில் இந்த தொடரில் இரண்டு வீரர்கள் அறிமுகமாக உள்ளனர். இதில் மார்க்ரம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணியில் எற்கனவே இடம் பெற்ற இருந்த நிலையில் முதன் முறையாக டி-20 அணியில் இடம் பிடித்துள்ளார். அதே போன்று ஆல் ரவுண்டர் அன்ரிச் நொர்டெ இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அசத்திய நிலையில் டி-20 போட்டியிலும் அறிமுகமாக உள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தென் ஆப்ரிக்கா அணியின் முன்னனி வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீதமாக முதல் டி-20 போட்டியில் மட்டும் விளையாட உள்ளனர். இரண்டு மற்றும் மூன்றாவது டி-20 போட்டியில் டுமினி தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி விளையாட உள்ளது.
முதல் டி-20 போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி : பாப் டுப் ப்ளாஸிஸ் (கேப்டன்), குயிடன் டி-காக், மார்க்ரம், ரெஸா ஹென்ரிக்ஸ், டுமினி, டேவிட் மில்லர், இம்ரான் தாஷிர், ராபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நொர்டெ, பெலுகுவாயோ, ப்ரிடொரியஸ், ஷம்சி, டெர் டுஸ்ஸென், ஸ்டைன்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது டி-20 போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி: ஜேபி டுமினி(கேப்டன்), ரெஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், கிரிஸ் மோரிஸ், மார்க்ரம், அன்ரிச் நொர்டெ, பெலுகுவாயோ, யூசிலே, ப்ரிடோரியஸ், டெர் டுஸ்ஸென், ஸ்டைன், ஷம்சி, சிம்லா.