நாம் தற்போதைய வீரர்களின் திறமையை வைத்து முன்னாள் சிறந்த வீரர்களுடன் ஒப்பிட்டு உள்ளோம்.அது சிலசமயம் சரியாக இருக்கும், சிலசமயம் மிகத்தவறாக அமையும்.இந்த ஒப்பிடு இரு தலைமுறையினருக்கான விளையாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி (மற்றும்) விளையாட்டின் நுணுக்கங்களை எடுத்துரைக்கிறது. உதாரணத்திற்கு அக்காலத்தில் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஒரே நிறப்பந்து உபயோகத்தில் இருந்தது ஆனால் தற்போது இருபோட்டிகளுக்கும் தனித்தனி நிறப் பந்துகள் வழக்கத்தில் உள்ளது.தற்போது போட்டிகளில் புதிய விதிமுறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்தி அசுர வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது கிரிக்கெட்.
சர்.பிராட் மேன், ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் காலங்களில் செய்த பல்வேறு சாதனைகளில் ஒருசில சாதனைகள் தற்போதைய கிரிக்கெட் வீரர் விராட் கோலி செய்து வருகிறார்.தற்போதைய வீரர்களில் விராட் கோலி நிறைய வீரர்களின் சாதனைகளைச் சமன் செய்தும், முறியடித்தும் வருகிறார். அதேபோல் அக்கால கிரிக்கெட் ஜாம்பவான்கள் செய்ததை போலவே ஒரு சில போட்டிகள் விராட் கோலிக்கும் அமைகிறது.முக்கியமாக விராட் கோலியும் சச்சின் செய்ததை போலவே ஐந்து நிகழ்வுகளைச் செய்து அசத்தியுள்ளார்.அதைப் பற்றி இங்குக் காணலாம்.
#1. இரண்டாவது ஒருநாள் போட்டியின் சதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக
ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களைக் கொண்டு கலக்கிய அணி.இப்போட்டியில்தான் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தியா அமைந்தது.
இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி, இந்தியா அணியும் பலம் வாய்ந்த அணிதான் என்று ஆஸ்திரேலியா வீரர்களுக்கு உணர்தச் செய்தனர்.
டெண்டுல்கர் கடினமான காலங்களில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியுள்ளார். இதேபோல் விராட் கோலியும் செய்து அசத்தியுள்ளார்.சச்சினுக்கும் கோலிக்கும் அதிகப்படியான ஒற்றுமை நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இருவருக்குமே தங்களது இரண்டாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இருவருமே சதத்துடன் 6 சிக்சரை விளாசியதுடன் 45 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் இலக்கை எட்டியுள்ளனர்.வருடம் (மற்றும்) நேரம் மட்டுமே வேற்றுமை மற்றபடி அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.இது ஒரு மிகப்பெரிய ஒன்றிய ஒற்றுமையாக உள்ளது.
#2. மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்திற்கெதிராக 150+ ரன்கள்
சச்சின் & கோலி இருவருமே தங்களது மூன்றாவது சதத்தை நியூசிலாந்திற்கெதிராக விளாசினர் அதுமட்டுமின்றி 150+ ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.1999-2000 ஆம் ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற நியூசிலாந்திற்கெதிரான போட்டியில் சச்சினின் சரளமான 186 ரன்களால் இந்திய அணி 376 என்ற பிரம்மாண்டமான ரன்களை குவித்தது.இறுதியில் 176 என்ற ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சச்சின் டெண்டுல்கர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இதேபோல் 2016 ஆம் ஆண்டு மொகாலியில் நியூசிலாந்திற்கெதிரானா போட்டியில் இந்திய அணி தோனி மற்றும் கோலியின் பங்களிப்பில் 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.இப்போட்டியில் கோலி அற்புதமாக விளையாடி 154 ரன்களை குவித்தார்.
இறுதியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாகப் போட்டியை வென்றது.அதிரடியாக ரன் குவித்த கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
#3. ஆர்.பிரமாதாச மைதானத்தில் மட்டும் இருவரும் தனித்தனியாக இலங்கைக்கெதிராக மூன்று சதங்கள்
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தனது அண்டை நாடான இலங்கையுடனான போட்டிகளில் மட்டும் ஒரு புத்துணர்வுடன் விளையாடுவர்.இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி(Average) அதிகமாகவே இருக்கும்.இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஓய்விற்குப் பிறகு அந்த அணியில் அற்புதமான பந்துவீச்சாளர்கள் என்று சொல்லதக்க வீரர்கள் யாரும் இல்லை.
சச்சின் (மற்றும்) விராட் கோலி இருவருமே 3 சதங்களை இலங்கைக்கு எதிராக இலங்கையில் உள்ள ஆர்.பிரமாதாச மைதானத்தில் விளாசியுள்ளனர்.அத்துடன் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் 8 சதங்களை இலங்கைக்கு எதிராக மட்டும் விளங்கியவர்கள் என்ற சாதனையைப் படைத்தனர்.இந்தச் சாதனை சச்சின் செய்தது போலக் கோலி செய்தது அவருக்கு ஒரு அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
#4. கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 90 ரன்களில் ஆட்டமிழந்தனர்
சச்சின் களத்தில் இறங்கினாலே இந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகி விடுவார்கள்.அவர் அணைத்து போட்டிகளிலும் சதம் விளாச வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.சில சமயங்களில் சச்சின் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இந்திய கேப்டனாகவும் செயல்படுவார்.அச்சமயத்தில் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகத் தமது ரன்களின் இலக்கை அடைய மிகவும் பிரஸ்ஸராக விளையாடுவார்
இதனால் சில நேரங்களில் தனது சதத்தினை முழுமையாக அடிக்காமல் பதட்டத்தினால் 90 ல் ஆட்டமிழப்பார். சச்சின் நிறையத் தடவை 90ல் பதற்றமடைந்து தமது சதத்தினை அடிக்காமல் 90ல் ஆட்டமிழந்துள்ளார்.ஒருநாள் போட்டியின் கேப்டனாகச் சச்சின் இருமுறை 90ல்ஆட்டமிழந்துள்ளார்.இதேபோல் விராட் கோலியும் இருமுறை பதட்டத்தினால் தமது சதத்தினை முழுமையாடைமல் 90ல் ஆட்டமிழந்துள்ளார்.
#5. 58வது சதத்தினை சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்திற்கெதிராக 103 ரன்களுடன் விளாசினர்
இந்நிகழ்வானது சச்சினின் சாதனையைக் கோலி பின்பற்றி வருகிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.சச்சின் சர்வதேச போட்டியில் 58வது சதத்தினை இங்கிலாந்திற்கு எதிராக விளாசினார் அதேபோல் கோலியும் தமது 58வது சர்வதேச சதத்தினை இங்கிலாந்திற்கு எதிராகவே விளாசியுள்ளார்.
ஆனால் ஒரேயொரு வித்தியாசம் கோலி இச்சதத்தினை விளாசும்போது இந்தியா வெற்றியடைந்தது.ஆனால் 2001-2002ல் அகமதாபாத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் இச்சதத்தினை விளாசும்போது போட்டி சமநிலையில் முடிந்தது.