"சிம்லாவிலிருந்து டெல்லிக்கு ஒரு ரயில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு ரயில்நிலையத்தில் ஒரு நிறுத்தமும் இருந்தது. ரயில்வே வழக்கம்போல் சில நிமிடங்கள் நிறுத்திவிட்டது. சச்சின் 98 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்தார். பயணிகள், ரயில்வே அதிகாரிகள், ரயில்களில் இருந்த அனைவரும் சச்சின் சதம் அடிக்கக் காத்திருந்தனர். இந்த ஜீனியஸ், இந்தியாவில் நேரத்தைக் கூட நேரம் தடுக்க முடியும்! "- இங்கிலாந்து கிரிக்கெட்டர் பீட்டர் ரோபக்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால், அவரின் தாக்கம் இன்றும் தணியவில்லை. இனிமேல் இந்தியாவின் நீல நிறத்தில் சச்சின் டெண்டுல்கர் எப்போதுமே ஒருபோதும் விளையாடமாட்டார் என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. இருப்பினும், அவரின் சிறந்த ஆட்டங்கள் என்றும் மனதில் நிலைத்தவை.
சச்சின் டெண்டுல்கரின் சிறந்த 5 ஒருநாள் ஆட்டங்களைப் பற்றி இங்குக் காண்போம்.
#5. 98(75 பந்துகள்) vs. பாகிஸ்தான், செஞ்சுரியன், 2003
2003 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அதில் பாகிஸ்தான் 273/7 ரன்கள் எடுக்க, இந்தியா தன் திறமையை வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோருக்கு எதிராக நிரூபிக்க நேர்ந்தது.
டெண்டுல்கர் தனது அபார ஆட்டத்தை அன்று வெளிபடுத்தினார். 75 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அன்று அவர் அக்தர் பந்தில் அடித்த அப்பர் சிக்ஸ் சிறந்த ஒரு சிக்ஸராக இன்றுவரை பார்க்கப்படுகிறது.
#4. 143(131 பந்துகள்) vs. ஆஸ்திரேலியா, ஷார்ஜா, 1998
சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையில் சிறந்த தொடர் இது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவரது புகழ்பெற்ற இரண்டு சதங்கள், இந்தத் தொடரிலிருந்து வந்தது இதற்கு எடுத்துகாட்டு.
தொடரின் கடைசி லீக் போட்டியில் அதிக ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 284/7 எடுத்தது. இறுதி போட்டிக்குத் தகுதி பெற, இதைச் சேஸ் செய்ய வேண்டும் அல்லது நியூசிலாந்தின் நிகர ரன் விகிதத்தை (NRR) கடக்க வேண்டும்.
சச்சினின் ஆட்டத்தில் அதிரடி அதிகமாக இருந்தது. இந்தியா தோல்வியுற்ற போதிலும், டெண்டுல்கரின் முயற்சிகள் வீண் போகவில்லை. இந்தியாவின் ரன் ரேட் நியூஸிலாந்தின் ரன் ரேட்டை தாண்டியது. இந்திய அணி இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
#3. 134(131 பந்துகள்) vs ஆஸ்திரேலியா, ஷார்ஜா, 1998
தன்னுடைய 25ஆவது பிறந்த நாளில் சச்சின் மற்றொரு மறக்க முடியாத ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
ஆஸ்திரேலியா 275/9 என்ற இமாலய ஸ்கோர் எடுத்தது. டெண்டுல்கர் 131 பந்துகளில் 134 ரன்களை எடுத்தார். வெற்றியைத் தேடி தந்தார். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்திய அணி.
#2. 175(141 பந்துகள்) vs. ஆஸ்திரேலியா, ஹைதெராபாத், 2009
ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. 351/4 என்ற ஸ்கோர் எடுத்தது ஆஸ்திரேலியா.
கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த இந்திய அணியைச் சச்சின் வழிநடத்தினார். 19 பவுண்டரிகள், 4 சிக்ஸ்கள் என இந்தியாவின் வெற்றியை நோக்கிச் சச்சின் நகர்த்தினார். அவர் ஆட்டமிழந்தவுடன், இந்திய அணியின் விக்கெட்கள் சரிந்தது. 17 பந்துகளில் 19 ரன்கள் என்ற எளிய இலக்கைக் கூட கடக்க முடியாமல் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.
#1. 117*(120 பந்துகள்) vs. ஆஸ்திரேலியா, சிட்னி, 2008
2008 ஆம் ஆண்டில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்ற தொடர் நடைபெற்றது. இறுதி போட்டிக்கு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன. முதல் இறுதி போட்டியில் சிட்னியில் மோதின. அதுவரை, அந்த மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. லீ, ஜான்ஜன், பிராக்கென் ஆகியோரின் வேகபந்து வீச்சை சமாளித்து, இந்திய அணியை வெற்றி பெற செய்தார் சச்சின். அது மட்டுமல்ல, இரண்டாவது இறுதி போட்டியிலும் 91 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்து ஆஸ்திரேலியா மண்ணில் சாதனை புரிந்தார் சச்சின்.