Create

விராட் கோலியின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர் 

India v Afghanistan - ICC Cricket World Cup 2019
India v Afghanistan - ICC Cricket World Cup 2019
கலைவாணன்

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எவ்வித குழப்பமும் அச்சமும் அடையவில்லை என இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். தொடர்ந்து 2010 உலக கோப்பை தொடரில் எவராலும் தோற்கடிக்க முடியாத அணிகளில் ஒன்றாக விளங்கிய இந்தியா, நேற்றைய போட்டியில் சற்று தொய்வு அடைந்தாலும் வெற்றியை தனதாக்கியது. ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் பந்துவீச்சாளர்களின் சிறப்பான தாக்குதலால் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இதன்படி, களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இணை ஐந்தாவது ஓவரிலேயே பிரிந்தது. அதற்கடுத்து தொடக்க ஆட்டக்காரரான ராகுல் கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்த முற்பட்டார். இருப்பினும், வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்ததால், இந்திய அணி தனது விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தட்டுத்தடுமாறி 50 ஓவர்களின் முடிவில் 224 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் அதை சதங்களை கடந்தனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 110 ரன்களை வாரி வழங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரசித் கான், இம்முறை 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களை கைப்பற்றி 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் சற்று தாக்குதலான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, இந்திய அணி. இதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது சமியின் அபார பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவற்றில், முகமது சமி ஹாட்ரிக் விக்கெட்களை புரிந்து 2019 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

Sachin Tendulkar hails Virat Kohli following India's win against Afghanistan.
Sachin Tendulkar hails Virat Kohli following India's win against Afghanistan.

இந்த போட்டியின் போது, விராட் கோலி பொறுமையை உணர்ந்ததாக சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவர் கூறியதாவது,

"ஒரு கட்டத்தில் விராத் கோலியின் கேப்டன்சி சிறப்பாக அமைந்தது. அவர் எவ்வித பயமும் குழப்பமும் அடையவில்லை. டாட் பால்களை தொடர்ந்து வீசியபோது ஆப்கானிஸ்தான் சற்று தடுமாறுவது நிச்சயமாகும் என்று கணித்த விராட் கோலியின் பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. எப்பொழுதும் நம்பிக்கையுடன் விளங்கும் விராத் கோலி, இம்முறை முன்னதாகவே ஆட்டமிழந்தார். அப்போது அவரின் உடல் போக்கு மற்றும் பாதங்களை நகர்த்தும் முறைகளில் சற்று மாறுபாடு தென்பட்டது. இன்று நான் அதை கண்டேன். பேட்டிங் செய்வதற்கு இது போன்ற ஆடுகளங்கள் சற்று கடினம் ஆகும் என்பதை விராட் கோலி பேட்டிங் செய்தபோது எனக்கு தெரியவில்லை. இன்று விராட் கோலி பேட்டிங் செய்தபோது பந்தினை போதிய நேரத்தில் தொடக்கத்திலிருந்தே அடித்துள்ளார்".

நேற்றைய வெற்றியின் மூலம், இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும், இத்தகைய வெற்றிகளை புரிந்த மூன்றாவது அணி என்ற பெருமையையும் படைத்தது, இந்தியா. கோப்பை தொடரை நடத்த இங்கிலாந்து அணியை எதிர் கொள்வதற்கு முன்னால் வரும் ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணியை தனது அடுத்த போட்டியில் சந்திக்க உள்ளது இந்திய அணி.


Edited by Fambeat Tamil

Comments

Quick Links

More from Sportskeeda
Fetching more content...