நடந்தது என்ன?
2000 ஆம் ஆண்டு கென்யாவில் உள்ள நைரோபியில் நடந்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய நாக்-அவுட் கோப்பையில் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் க்ளன் மெக்ராத் வீசிய ஓவரில் மட்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கான காரணத்தை சச்சின் டெண்டுல்கர் தற்போது தெரிவித்துள்ளார். ஜீன் 9 அன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய போட்டி நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராக இடம்பெற்றிருந்தார். மெக்ராத்தின் வேகப்பந்து வீச்சை தடுமாறச் செய்து, அவரது மனநிலையை களைப்பதற்காகவே அவ்வாறு செய்ததாக சச்சின் டெண்டுல்கர் இந்த சிறந்த உரையாடலில் தெரிவித்திருந்தார்.
உங்களுக்கு தெரியுமா...
நைரோபியில் நடந்த இந்த போட்டி மிகவும் பிரபலமானதாகும். சச்சின் டெண்டுல்கர் ஆரம்பம் முதலே பந்தை ஆடுகளத்தின் அனைத்து புறங்களிலும் சிதறவிட்டு 37 பந்துகளில் 38 ரன்களை விளாசி அதிரடி தொடக்கத்தை அளித்தார். க்ன் மெக்ராத் கண்டிப்பாக இந்திய வீரர்களுக்கு கடும் தாக்கத்தை அளிப்பார் என சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே கணித்துவிட்டார், இதனால் மெக்ராத் வீசிய முதல் ஓவர் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி விட்டார். ஆடுகளம் அவருக்கு மிகுந்த உதவியாக இருந்தது. 11.4 ஓவர்களில் ஓபனிங் பார்டனர் ஷீப் 66 ரன்களை குவித்ததன் மூலம் இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய வெற்றி பெற்றது.
கதைக்கரு
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சகவீரர் விரேந்தர் சேவாக் ஆகிய இருவரும் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அந்தப் போட்டியில் ஷீகார் தவான் ஒரு அதிரடி ஆட்டத்தை நெதன் குல்டர் நில் பௌலிங்கில் வெளிப்படுத்தினார். இதனை கண்ட சேவாக், சச்சின் டெண்டுல்கருக்கு 2000 ஆண்டு நடந்த ஐசிசி நாக்-அவுட் கோப்பை நியாபகப் படுத்தினார். இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்துவீச்சை சமாளிக்க தவான் கையாண்ட இந்த நுணுக்கத்தை அப்போதே வெளிபடுத்தி அதிரடியாக விளையாட்டினை வெளிபடுத்தினீர்களா என்று சச்சின் டெண்டுல்கரிடம் கேள்வி எழுப்பினார் விரேந்தர் சேவாக்.
இதற்கு பதில் அளித்த சச்சின் கூறியதாவது,
"இந்திய அணி அதிரடி தொடக்கத்துடன் ஆரமிக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். முதல் ஓவர் வீசும் போதே ஆஸ்திரேலிய பந்துவீச்சை கணித்தோம், மிகவும் அதிவேகமாக வீசப்பட்டது. எனவே நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். எனவே சவ்ரவ் கங்குலியிடம் சென்று, "நான் சுதந்திரமாக விளையாடப் போகிறேன் எனக் கூறி விட்டு, மெக்ராத்தின் ஓவரை அதிரடியாக விளையாட ஆரம்பித்தேன்".
மெக்ராத்தை நகைத்தீர்களா என சச்சினிடம் சேவாக் கேள்வி எழுப்பினார்.
"நான் மெக்ராத்தை நகைக்கவில்லை. ஆனால் எனது பேட் மூலம் சில சிறப்பான ஷாட்களை விளாசினேன். இது அவரது மன நிலையை குலைத்தது. மற்றும் பௌலிங்கில் தனது கவணத்தை செலுத்த தவறினார்."
"சில சமயங்களில் பௌலர்களின் மனநிலையை குலைக்க சில அதிரடி பேட்டிங் நுணுக்கங்களை கையாண்டாலே போதுமானது"
அடுத்தது என்ன?
2019 உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்தை ஜீன் 13 அன்று நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.