இன்று நாம் அனைவரும் கஜா புயலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இதே நாளில் 2013ல் 20 வருடங்களாக நம்மைச் சூழ்ந்திருந்த புயல் ஓய்ந்து போனது.விடை பெற்றார் கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கர் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்
ஆம், "சச்சின் சச்சின்" என்ற பலத்த ஓசையின் நடுவே நவம்பர் 14, 2013ம் ஆண்டு ஓய்வுபெற்றார். அவரது 200வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள்அணிக்கு எதிராக நடந்தது. இதன் மூன்றாம் நாள் ஆட்டம் சரியாக இதே நாளில் அன்று நடைபெற்றது. இந்தியாவின் சிறந்த பந்துவீச்சு காரணமாக மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆட்டம் மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதுவே சச்சின் தெண்டுல்கரின் கிரிக்கெட்டில் கடைசி நாளாகவும் அமைந்தது.
சச்சின் தெண்டுல்கரின் கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டிபற்றிய சில தகவல்களைக் காண்போம்.
#சச்சின் 20 வருட கிரிக்கெட் வரலாற்றில் நிகழாத ஒரு சம்பவம் அவரது இந்தக் கடைசி போட்டியில் நிகழ்ந்தது. ஆம், அவரது தாய் மைதானத்திற்கு வந்து சச்சின் ஆட்டத்தை ரசிப்பது இதுவே முதலும் கடைசியும் ஆகும்.
#பல பரபரப்பான சூழ்நிலையில் சச்சினுக்காகவே இந்தத் தொடர் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே 199வது போட்டிசிறப்பு வாய்ந்த கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்திலும், 200வது போட்டி மும்பை, வான்கடே மைதானத்திலும் நடைபெற்றது.
#இந்த இரு ஆட்டங்களிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காயின் மூலமாகவே டாஸ் போடப்பட்டது. அதில் இரு புறமும் சச்சினின் முகம் பொறிக்கப்பட்டிருந்தது.
#உலக கிரிக்கெட் வரலாற்றில் 200 டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஒரே வீரர் சச்சின் ஆவார். அந்தப் போட்டியில் 74 ரன்களில் டியோநரின் பந்துவீச்சில் டேரன்சமி கேட்சில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, காரணம் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.
#சச்சின் ஆட்டம் முடிவுக்கு வந்ததும் கடைசியாக ஒருமுறை ஆடுகளத்திற்கு நடுவே சென்று தொட்டு வணங்கி, ரசிகர்களுக்குக் கை அசைத்துப் பிரியா விடைபெற்றார். அவருக்கு இரு அணி வீரர்களும் "கார்ட் ஆஃப் ஹானர்" எனச் சொல்லக்கூடிய மரியாதை அளிக்கப்பட்டது.
#மேலும் அவரது இறுதி உரையானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதில் பல நேரங்களில் கண்ணீர் மல்கக் காணப்பட்டார் சச்சின்.
கிரிக்கெட் உலகிற்கு அறியாத வயதில் காலடி எடுத்து வைத்து, இன்று கிரிக்கெட்டை உலகிற்கே அறியவைத்த பெருமை சச்சினுக்கே சேரும்.
#மேலும் சச்சினின் ஓய்வுக்குப் பிறகு மற்றொரு முக்கியமான உண்மை அவரது ஜெர்சி எண் 10 இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்றது.
#சச்சின் சுயசரிதையின் பெயர் "Playing It My Way", பின்னர் "கிரிக்கெட்டின் கடவுள்" என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.அது சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது.
அவரது கடைசி போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் சச்சினை முன் உதாரணமாகக் கொண்டு வந்தவர்கள் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா உட்பட அந்த நிகழ்வை அவர்கள் வாழ்நாளில் மறக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சச்சினை போல் இந்த கிரிக்கெட் உலகிற்கு இன்னொருவர் வருவாரோ….. பொருத்திருந்து பார்க்கலாம்.