நடந்தது என்ன?
கவுண்டி ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மற்றும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் 3 முதல் 5 மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். சாம் பில்லிங்ஸ் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அத்துடன் தன்னுடைய தாய் நாடன இங்கிலாந்து அணியில், அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் இடம்பிடித்திருந்தார்.
பிண்ணனி
சமீபத்தில் 2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதன்மை இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சாம் பில்லிங்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் உலகக் கோப்பைக்கு முன் இங்கிலாந்து அணி அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானிற்கு எதிராக டி20/ஓடிஐ தொடர்களில் பங்கேற்க உள்ளது. அந்த அணியில் சாம் பில்லிங்ஸ் இடம்பெற்றுள்ளார்.
ஆனால் தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த இரு தொடர்களின் அணியிலிருந்தும் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.
கதைக்கரு
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸிற்கு குறைந்த வாய்ப்புகளே சென்னை அணியில் வழங்கப்பட்டது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் சாம் பில்லிங்ஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் அவர் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே இங்கிலாந்து சென்று விட்டார்.
பாகிஸ்தான் தொடருக்கு பயிற்சி எடுக்கும் விதமாக சாம் பில்லிங்ஸ் இவ்வருடத்தின் தனது முதல் கவுண்டி போட்டியில் விளையாடினார். கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியின் போது தோல்பட்டையில் சாம் பில்லிங்ஸிற்கு காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் 3 முதல் 5 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சாம் பில்லிங்ஸ் விலகலினால் அவருக்கு பதிலாக பென் ஃபோக்ஸ் பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அலெக்ஸ் ஹால்ஸ் உலகக் கோப்பை அணியில் விளையாடுவது தற்போது சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. சாம் பில்லிங்ஸ் இவருக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது சாம் பில்லிங்ஸிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜேம்ஸ் வைன்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் உலகக் கோப்பையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
27 வயதான சாம் பில்லிங்ஸிற்கு கிரிக்கெட்டில் வருங்காலத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளது. கூடிய விரைவில் காயத்திலிருந்து குணமாகி மீண்டும் இங்கிலாந்து அடிக்கு திரும்புவார். இங்கிலாந்து விக்கெட் கீப்பரான இவர் கடந்த காலங்களில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெறாததே இங்கிலாந்து ரசிகர்களுக்கு கவலையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக விலகியது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு இவரது வருகையை எதிர்நோக்கி இங்கிலாந்து ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.