கதை என்ன?
சமீபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, ஈ.எஸ்.பி.என்.கிரிகின்ஃபோவுக்கு அளித்த பேட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து நான்கு ஒருநாள் சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை முறியடிக்க முடியும் என்று கருத்து தெரிவித்தார்.
உங்களுக்குத் தெரியாவிட்டால்…
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையில் சங்கக்காரா தொடர்ந்து நான்கு சதங்களை அடித்தார். குமார் சங்கக்காரர் பங்களாதேஷ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். பங்களாதேஷ் -105, இங்கிலாந்து -117, ஆஸ்திரேலியா - 104 மற்றும் ஸ்காட்லாந்து - 124 ரன்கள் எடுத்து வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
கதைக்கரு
சமீபத்தில், நடந்த கிரிக்ன்ஃபோவுடனான நேர்காணலின் சிறப்புப் பிரிவில் குமார் சங்கக்காரரிடம் 25 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு குமார் சங்கக்காராரா அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்து வந்தார். அப்போது கேள்விகளில் ஒன்றாக இவரின் தொடர்ச்சியாக நான்கு சதங்களை குவித்த சாதனையை தற்போது எவரால் இந்த சாதனையை சமப்படுத்தவோ அல்லது முறியடிக்கவோ முடியும் என்று கேட்டார்கள்.
இதற்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா அதற்கு சில நாட்களாகும் என்றும் ஆனால் தற்போது இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி அனைவருடனும் ஒத்து பார்க்கும் போது இவர் தற்போது முன்னிலையில் இருப்பதாகவும் இவர் கண்டிப்பாக முறியடிப்பார் என்றும் கூறியுள்ளார்.
2018 ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருதரப்பு தொடரில் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் சதங்களை அடித்த விராட் கோலி ஏற்கனவே தனது சொந்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விராட் கோலி 140, 157 மற்றும் 107 ரன்கள் எடுத்துள்ளார், இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்திய ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு இதேபோன்ற சாதனையைச் பதிவு செய்த 8 வீரர்கள் உள்ளனர் - ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்வர், ஹெர்ஷல் கிப்ஸ், ஏபி டிவில்லியர்ஸ், குயின்டன் டி காக், ரோஸ் டெய்லர், பாபர் ஆசாம், மற்றும் ஜானி பேர்ஸ்டோவ்.
இருப்பினும், இந்த பேட்ஸ்மேன்கள் யாரும் குமார் சங்கக்காராவின் சாதனையை சமன்ப்படுத்த முடியவில்லை. ஆனால் தற்போது விராட் கோலி தான் அவரை மிஞ்சுவார் என்று குமார் சங்கக்காரரே நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்திய கேப்டன் உண்மையில் இந்த சாதனையை அடைய முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
அடுத்தது என்ன ?
இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி இதுவரை தொடர்ச்சியாக மூன்று அரைசதம் அடித்துள்ளார், ஆனால் அவற்றில் எதையும் மூன்று இலக்க ஸ்கோராக மாற்றத் தவறிவிட்டார். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இன்னும் 4 லீக் போட்டியில் விளையாட உள்ளன, அரை இறுதி போட்டியில் குறைந்தது ஒரு போட்டி என 5 போட்டிகள் உள்ளன. இந்திய ரசிகர்கள் விராட் கோலி இந்த போட்டிகளை பயன்படுத்தி இலங்கை அணி கேப்டன் குமார் சங்கக்காராவின் சாதனையை முறியடிப்பார் என்று நம்புகிறார்கள்.