நடந்தது என்ன?
கே.எல்.ராகுல் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசினார். இவர் இந்த போட்டியில் 99 பந்துகளில் 108 ரன்களை விளாசி இந்திய அணியின் 4வது பேட்ஸ்மேன் இடத்தை நிரப்பினார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா மோதவுள்ள முதல் போட்டியில் சஞ்சய் மன்ஜ்ரேகரின் இந்திய ஆடும் XI-ல் கர்நாடக பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலை தேர்வு செய்யவில்லை.
உங்களுக்கு தெரியுமா...
விஜய் சங்கர் இந்திய அணியில் இடம்பெற்றதற்கான முதல் காரணம் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும் என்பதற்காக தான். இதனை இந்திய தேர்வுக்குழு தலைவர் உலகக் கோப்பை அணியை அறிவிக்கும் போதே தெளிவாக அனைவரிடமும் தெரிவித்திருந்தார். எனவே சஞ்சய் மன்ஜ்ரேகரின் ஒப்பிட்டின்படி, விஜய் சங்கர் உலகக் கோப்பை இந்திய அணியில் நம்பர்-4 பேட்ஸ்மேனாக மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு அதிக முன்னுரிமை அளித்து சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆரம்ப கட்ட தகுதிச் சுற்றில் அவரது ஆட்டத்திறனை பொறுத்து கே.எல்.ராகுலுக்கு நம்பர் 4 வரிசையில் வாய்ப்பளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கதைக்கரு
"கிரிக்இன்போ" என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொலியில் சஞ்சய் மன்ஜ்ரேகர் கூறியதாவது, இந்திய அணியில் நம்பர்-4 பேட்ஸ்மேனாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார், கே.எல்.ராகுல் அல்ல.
விஜய் சங்கரை நம்பர்-4 இடத்திலும், கேதார் ஜாதவை நம்பர்-5 இடத்திலும் சஞ்சய் மன்ஜ்ரேகர் தேர்வு செய்துள்ளார். தினேஷ் கார்த்திக்கை அவர் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில வருடங்களாக கேதார் ஜாதவ் இந்திய ஒருநாள் அணியின் வழக்கமான வீரராக உள்ளார். ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து வந்த பிறகு அவர் பயிற்சி ஏதிலும் ஈடுபடவில்லை. இதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள தோல்பட்டை காயம் பூரண குணமடையாததே ஆகும்.
இந்திய பேட்டிங் வரிசையில் ஏழாவது வீரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முழு ஓவரான 10 ஓவரையும் வீச இயலவில்லை. ஏனெனில் இக்கட்டான சூழ்நிலையில் கேதார் ஜாதவ் 6வது பௌலராக பந்துவீச்சை மேற்கொண்டு அசத்துகிறார்.
சஞ்சய் மஜ்ரேகரின் அணியின் பௌலிங்கில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. முகமது ஷமி மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ரா ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்து உள்ளார். அத்துடன் யுஜ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரட்டை சுழற்பந்து வீச்சாளர்களை தன் அணியில் சஞ்சய் மன்ஜ்ரேகர் தேர்வு செய்துள்ளார். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ரவீந்திர ஜடேஜா இவரது அணியில் இடம்பெறவில்லை.
அடுத்தது என்ன?
இந்திய அணி ஜீன் 5 அன்று ரோஸ் பௌல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை தனது முதல் தகுதிச் சுற்றில் சந்திக்க உள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியின் 4வது பேட்ஸ்மேனாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சங்கர் நம்பர்-4 பேட்ஸ்மேனாகத்தான் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றார். தற்போது இந்திய கேப்டன் விராட் கோலிக்கு யாரை நம்பர்-4ல் இறக்குவது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.