பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியுசிலாந்து அணி 3 டி20 ,3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது .3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து இரு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்து கொண்டனர்.
தற்போது இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி 16 ம் தேதி அபுதாபியில் துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.முதல் இன்னிங்ஸ்ல் நியூசிலாந்து அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.அதிகபட்சமாகக் கேப்டன் வில்லியம்சன் 63 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும் அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாகப் பாபர் அசாம் 62 ரன்கள் குவித்தார்.நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும் ,கரான்ட் ஹோம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இரண்டாவது இன்னிங்ஸில் 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் லாதம், ஹஸன் அலி வீசிய முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாழும் நிலைத்து ஆடிய வால்டிங் மற்றும் நிக்கோலஸ் அரைசதம் விளாசினர்.பின்னர் வால்டிங் 59 ரன்களிலும் நிக்கோலஸ் 55 ரன்களிளும் ஆட்டமிழந்தனர்.இறுதியில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பாகிஸ்தான் அணி சார்பில் ஹசேன் அலி மற்றும் யாசிர் ஷா தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் பின்னர் நிலைத்து ஆடிய அசார் அலி மற்றும் அசாட் ஷாபிக் கூட்டணி அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றது.ஷாபிக் 45 ரன்களில் வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் அஜாஸ் படேல் சுழலில் சிக்கிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.அதிகபட்சமாக அசார் அலி 65 ரன்களில் அஜாஸ் படேல் பந்தில் கடைசி விக்கெட்டை இழந்தார். நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் தனது முதலாவது டெஸ்ட் போட்டியிலே 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.பாகிஸ்தான் அணி கடைசி 41 ரன்களில் மட்டும்7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சப்ராஸ் அகமது கூறுகையில் ' இந்தத் தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தங்களது அணி வீரர்கள் பேட்டிங்ல் சொதப்பியதே தோல்விக்குக் காரணம் எனக் கூறியுள்ளார். முதலாவது இன்னிங்ஸ்ல் நியூசிலாந்து அணியை 153 ரன்களிளல் சுருட்டியும் ஆட்டத்தில் வெற்றிபெற முடியாதது வருத்தம் அளிப்பதாகக் கூறினார். இரண்டாவது இன்னிங்ஸ்ல் பிட்ச் பவுளிங்கிற்கு சாதகமாக அமைந்தது எனவும் ஹசாஸ் படேல் சிறப்பாகப் பந்துவீசியதாகக் கூறினார்'.
ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹசாஸ் படேல் கூறியதாவது ' தனது முதலாவது போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெறுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும் இந்தப் போட்டியில் வெல்வது அவ்வளவு எளிதல்ல எனவும் பிட்சை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்டதாகவும் கூறினார்.தனது நாட்டிற்கு வெற்றியைத் தேடித்தந்ததற்கு பெருமையாக உள்ளதாகக் கூறினார்.தனது நாட்டிற்காக மேலும் பல போட்டிகள் விளையாட வேண்டும் என அவர் கூறியுள்ளார்'.
30 வயதான அஜாஸ் படேல் இந்தியாவில் மும்பை நகரை சொந்த ஊராக கொண்டது குறிப்பிடத்தக்கது.