சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியிலும், மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த பேட்ஸ்மேன்கள் தான், சிறப்பாக விளையாடி தங்களது அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக இருப்பார்கள். இந்த திறமையான பேட்ஸ்மேன்களில் யார் யார் நமது இந்திய அணிக்கு எதிராக, கடந்த 2018 ஆம் வருடத்தில் சதம் விளாசி உள்ளனர், என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) ஜோ ரூட் ( இங்கிலாந்து அணி )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். இவர் இங்கிலாந்து அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணி நம்பர்-1 அணியாக திகழ்வதற்கு இவர் தான் முக்கிய காரணம். இங்கிலாந்து அணியில் இவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார்.
நீண்ட நேரம் நிலைத்து நின்று பொறுமையாக விளையாடித்தான் ரன்களை சேர்ப்பார். அனைத்து சர்வதேச போட்டிகளிலுமே, இங்கிலாந்து அணிக்கு சராசரியான ரன்களை அடித்து கொடுத்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 216 ரன்களையும், 2 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோக் ரூட் இதுவரை 125 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 5090 ரன்களையும், 14 சதங்களையும் அடித்துள்ளார்.
#2) சிம்ரோன் ஹெட்மேயர் ( மேற்கிந்திய தீவுகள் அணி )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த இளம் அதிரடி வீரரான ஹெட்மேயர். இவர் இளம் வயதிலேயே தனது அதிரடியின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி மே 23-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில், இவர் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தனது அதிரடியை காண்பித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 259 ரன்களையும், ஒரு சதமும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார்.
#3) சாய் ஹோப் ( மேற்கிந்திய தீவுகள் அணி )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பரான சாய் ஹோப். மேற்கிந்திய தீவுகள் அணியில் அனைத்து போட்டிகளிலுமே சராசரியான ரன்களை அடித்து வரும் வீரர் என்றால் அது சாய் ஹோப் தான். சமீபகாலமாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 1 சதத்தையும், 250 ரன்களையும் விளாசியுள்ளார்.