எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் முன்னேப்போதும் இல்லாத மாற்றம் ஒன்று செய்யப்பட்டிருக்கின்றது. ஐபிஎல் தொடங்கிய முதலே ஏலத்தை தொகுத்து வழங்கி வந்தவர் ரிச்சர்ட் மேட்லி. வரும் டிசம்பர் 18-ம் தேதி நடக்கவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில், ஐபிஎல் நிர்வாகம் இவரை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவருக்குப் பதிலாக ஹக் எட்மடேஸ் ஏலத்தை தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் மேட்லிக்கு பதிலாக எட்மடேஸ் ஏலம் விடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேட்லியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னை அழைக்கவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே இதுவரை ஐபிஎல் ஏலத்தை தொகுத்து வழங்கியதை நினைவுகூர்ந்த மேட்லி, எம்.எஸ்.தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விற்றதே தனது ஏலம் விடும் பணியின் மைல்கல்லாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
ஏல நடைமுறையை முறையாகப் பின்பற்ற பிசிசிஐ நிர்வாகமானது சோதிபாய் என்னும் நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த ரிச்சர்ட் மேட்லியை பணியில் அமர்த்தியது. ரசிகர்கள் நடக்கும் ஏலத்தை மிகுந்த ஆர்வமோடு எதிர்பார்க்க காரணம் மேட்லியின் விறுவிறுப்பான அணுகுமுறை. அவ்வாறு ஏலத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
இதற்கிடையே பிசிசிஐ இந்த மாதம் நடக்கவிருக்கும் ஏலத்தில் இவரை அழைக்கவில்லை என்று தெரிகிறது. இதைப் பற்றிக் கருத்துக் கூறிய மேட்லி, ஏலத்தில் பங்கு பெறாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இந்தியாவில் உள்ள நண்பர்களை மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார். உங்களுடைய வரவேற்புகளுக்கு நன்றிகள் என்று ட்வீட் செய்துள்ளார்.
இவர் வீரர்களிடமும், அணி உரிமையாளர்களிடமும் சிறந்த நட்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
மையக்கருத்து :
இவர் பங்கு பெற மாட்டார் என்று செய்திகள் வந்த பின், பலர் சமூகவலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் பக்கம் ஒன்று மேட்லி பங்கு பெற மாட்டார் என்று பதிவிட்டிருந்த டீவீட்டிற்கு பதில் அளிக்கும் விதமாகத் தோனியை விற்றது மைல்கல்லாகக் கருதுவதாக அவர் கூறிய கூற்றை நினைவுபடுத்தியது.
அவர் கூறியிருந்தது பின்வருமாறு:
“என்னை பொறுத்தவரை , 2008 ஐபிஎல் ஏலத்தில் தோனியை அமெரிக்க டாலர் 11.5 மில்லியனுக்கு தனது சுத்தியினால் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விற்றது, நான் செய்திருந்த ஏலத் தொகுப்பில் இன்றியமையாதது”
மேட்லி இவ்வாறு கூறியிருந்ததை நினைவூட்டிய சிஎஸ்கே ரசிகர் பக்கத்தில் இருந்த பதிவிற்கு அவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது “சிஎஸ்கே நண்பர்கள் தன்னை நன்றாக அறிந்து கொண்டுள்ளார்கள் அதற்கு மிக்க நன்றி, இன்றளவும் எம் எஸ் தோனியை விற்றதே தனது ஏல பயணத்தில் சிறப்பம்சமாக உள்ளது #விசில்போடு” என்று பதிவிட்டிருந்தார்.
ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் தோனியின் வர்த்தகமானது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது என்ன?
மேட்லி இல்லாவிட்டாலும் ஹக் எட்மடேஸ், ஏல வர்த்தகத்தை தொகுத்து வழங்குவார். மேட்லி விட்டுச்சென்ற கண்ணியத்தை எட்மடேஸ் பின்பற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 1000+ வீரர்கள் பங்கேற்பதால் இந்த வருட ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
எழுத்து : ராகவ் ரவிச்சந்திரன்
மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்