2019ம் உலகக்கோப்பை தொடர் மே 30ம் தேதி கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 45 லீக் சுற்று, 2 அரையிறுதி சுற்று மற்றும் இறுதி சுற்று என 48 போட்டிகள் நடைபெறும். இதில் ஜூலை 6 தேதி அன்று 45 லீக் போட்டிகளிலும் முடிவடைந்தது. புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடத்தை பெற்றுள்ள அணிகள் மட்டும் அரையிறுதி போட்டிக்கு இடம்பெறும். அந்த வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்தியா மற்றம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. எனவே அரையிறுதியில் மோதவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டி பற்றிய தகவல்கள் மற்றும் அணியின் வீரர்கள் பற்றி காண்போம்.
போட்டி விவரங்கள்
தேதி: செவ்வாய், 9 ஜூலை 2019
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இடம்: ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
லீக்: ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
இடம் புள்ளிவிவரங்கள்
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 225
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 197
அதிகபட்ச ரன்கள்: 397/6 (50 Ov) by ENG vs AFG
குறைந்தபட்ச ரன்கள்: 45/10 (40.3 Ov) by Can vs ENG
Highest Chased: 286/4 (53.4 Ov) by ENG vs NZ
Lowest Defended: 221/8 (60 Ov) by ENG vs NZ
நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை
மொத்தம்: 106
இந்தியா: 55
நியூசிலாந்து: 45
சமம்: 01
முடிவற்ற: 05
உலகக்கோப்பையில் மோதிய எண்ணிக்கை
மொத்தம்: 8
இந்தியா: 3
நியூசீலாந்து: 4
முடிவற்ற:01
அணி விவரங்கள்
இந்திய அணி
- நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் பதிலாக கேதர் ஜாதவ் இடம்பெறுவார்.
- ரவிந்திர ஜடேஜா அரையிறுதியில் யூ.சாஹல் மற்றும் குல்திப் யாதவ் இருவருள் ஒருவரின் இடத்திற்கு விளையாடுவார்.
- புவனேஷ்வர் குமார் பதிலாக முகமது ஷமி பும்ராவுடன் ஜோடி சேரந்து தொடக்கத்தில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி
- நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக கடைசி ஆட்டத்தை விளையாடவில்லை என்பதால் டிம் சவுதி பதிலாக லாக்கி பெர்குசன் மீண்டும் களமிறங்குவார்.
- மற்றபடி அதே சிறந்த அணியுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வீரர்கள்
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்:
- ரோகித் சர்மா
- விராட் கோலி
- பும்ரா
- முகமது ஷமி
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள்:
- கேன் வில்லியம்சன்
- ரோஸ் டெய்லர்
- டிரெண்ட் போல்ட்
- மார்டின் குப்தில்
விளையாடும் 11
இந்திய அணி - ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து அணி - மார்டின் குப்தில், கொலின் முன்ரோ / ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்