ஷாஹீத் அஃப்ரிடியின் ஆல்-டைம் உலகக் கோப்பை அணியில் இந்திய வீரராக விராட் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹீத் அஃப்ரிடி தனது ஆல்-டைம் உலகக் கோப்பை அணியை வெளியிட்டுள்ளார். இந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறாததது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அனைத்து உலகக் கோப்பை அணியிலும் நிரந்தர வீரராக இடம்பெற்றிருப்பார். ஏனெனில் கடந்த கால ஐசிசி தொடர்களில் இவரது சிறப்பான பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
சச்சின் டெண்டுல்கர் 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று 45 போட்டிகளில் விளையாடி 2278 ரன்களை விளாசியுள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்களை விளாசியோர் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
2011 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தார். தனது கடைசி உலகக் கோப்பையின் கடைசி போட்டியில் தனது சொந்த மண்ணாண வான்கடே மைதானத்தில் விளையாடினார்.
சச்சினுக்கு பதிலாக சயீத் அன்வர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டை தொடக்க ஆட்டக்காரராக ஷாஹீத் அஃப்ரிடி தேர்ந்தெடுத்துள்ளார். இந்த வரிசையில் ரிக்கி பாண்டிங் அடுத்த வீரராக உள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றின் ஆல்-டைம் சிறந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்காக 2003 மற்றும் 2007 ஆகிய இரு ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளார்.
அத்துடன் 2011 ஆம் ஆண்டில் அரையிறுதி வரை ஆஸ்திரேலிய அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அரையிறுதியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
அஃப்ரிடி-யின் ஆல்-டைம் உலகக் கோப்பை வீரர்கள் பட்டியலில் அடுத்தாக விராட் கோலி உள்ளார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜ்மாம்-உல்-ஹாக் இடம்பெற்றுள்ளார்.
ஜாக்யூஸ் காலீஸ் மட்டுமே வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஆஃப்ரிடியின் ஆல்-டைம் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.
லெஜன்ட்ரி வேகப்பந்து வீச்சாளர்கள் வாஸிம் அக்ரம், சோயிப் அக்தர் மற்றும் க்ளின் மெக்ராத் ஆகியோரை அப்ரிடி தனது ஆல்-டைம் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளார்.
ஷேன் வார்னே மற்றும் சக்லைன் முஷ்டாக் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை அஃப்ரிடி தனது அணியில் தேர்ந்தேடுத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள முத்தையா முரளிதரனை அஃப்ரிடி கண்டுகொள்ளவில்லை.
அஃப்ரிடி 27 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011 உலகக் கோப்பையில் அஃப்ரிடி மற்றும் ஜாஹீர் கான் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். இந்த வருடத்தில்தான் அஃப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் அதே வருடத்தில் சில மாதங்களுக்கு பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வந்த அஃப்ரிடி அதற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவரை கண்டுகொள்ளாத காரணத்தால் இறுதியாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இருப்பினும் கடந்த வருடத்தின் மே மாதத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலக XI அணியில் அஃப்ரிடி இடம்பெற்றிருந்தார். இந்த போட்டி சர்வதேச போட்டிகளுக்கு இனையானது ஆகும். இதன்மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு அஃப்ரிடி சர்வதேச போட்டியில் விளையாடினார்.
மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலபரிட்சை நடத்த இருக்கின்றன. இறுதி போட்டி ஜீலை 14 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஷாஹீத் அஃப்ரிடியின் ஆல்-டைம் உலகக் கோப்பை XI
சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், விராட் கோலி, ரிக்கி பாண்டிங், இன்ஜ்மாம்-உல்-ஹக், ஜாக்வஸ் காலிஸ், வாஸிம் அக்ரம், க்ளின் மெக்ராத், ஷேன் வார்னே, சோயிப் அக்தர், சக்லைன் முஷ்டாக்.