தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆல்-ரவுண்டராக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர் ஷாகிப் அல் ஹசன்.
இவர் சாதாரண குடும்பத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறிய கிராமத்தில் மாவுரா என்ற இடத்தில் பிறந்தார். அவர் பிறந்தபோது குடும்பம் மிக வறுமையில் இருந்தது தினப்படி சாப்பாட்டிற்கு அவர் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வந்தது. இவர் குடும்பத்தினர் வறுமையின் காரணமாக கொல்கத்தாவில் வேலை பார்த்து குடும்ப சுமைகளை அடைத்து வந்தனர். ஆனால் ஷாகிப் அல் ஹசன் பிரச்னைக்கு ஒரு பெரிய விஷயமாக பொருட்படுத்தாமல். மிக வறுமை நிலையில் கிரிக்கெட் மீது பற்றுக்கொண்டு 12 வயது இருக்கும் போதே உள்ளூர் போட்டிகளில் நண்பர்களுடன் விளையாடினார். இதனையடுத்து பள்ளி கிரிக்கெட் அணியில் சேர்ந்தார் பள்ளியில் அதிரடியாக வேகப்பந்து வீசி இவர் கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கில் முன்னேறினார்.
இவர் ஒரு நாள் பள்ளி அணியில் விளையாடும் போது இவரது திறமையைக் கண்டு வியந்து போன பங்களாதேஷ் அணி கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் அந் நாட்டின் முன்னணி கிளப் அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பின் மூலம் அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது திறமையை வெளிப்படுத்தி வந்தார் அங்கு கிடைத்த அறிவுரையின் பேரில் பவுலிங் திறமையை கற்றுக்கொண்டு மேலும் பேட்டிங் திறமையை சரியாகக் கற்றுக் கொண்டார். இதனால் அவரின் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் இருந்து மீண்டு வர தொடங்கியது 17 வயதில் கிளப் அணியில் ஆடியதைப் பார்த்த பங்களாதேஷ் அணி நிர்வாகிகள் நேரடியாக இவரது தேசிய அளவில் களமிறங்கினார்கள். இதனை அடுத்து 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியின் அண்டர் 19 வாய்ப்பு கிடைத்தது இதன்மூலம் பயிற்சியை தொடங்கிய ஷாகிப் அல் ஹசன் மேலும் அவரது திறமையை வெளிப்படுத்தினார் அண்டர் 19 தொடரில் 85 பந்தில் அவர் சதத்தை கடந்தார்.
இதன் மூலம் அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது முதலில் பேட்டிங் மட்டுமே செய்து வந்த நிலையில் முழு ஆல்ரவுண்டராக மாறினார் இதனைக் கண்ட மற்ற நாடுகள் கவுண்டி கிரிக்கெட், ஐபிஎல், பிபிஎல் உள்ளிட்ட பெரிய தொடரில் இவரை எடுத்தனர்.
இதுவரை 203 ஒருநாள் ,53 டெஸ்ட் போட்டி ,72 20 ஒவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது உலகின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார் கடந்த 10 வருடங்களாக ஆல்ரவுண்டர் இடத்தில் மாறி மாறி அமர்ந்து வருகிறார். இதற்கு முன் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 99 பந்துகளில் 124 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ரன் அடித்ததன் மூலம் பங்களாதேஷ் அணி எளிதாக வென்றது, இவர் ஆட்டத்தைப் பார்த்து மற்ற அணிகள் பயந்து போய் உள்ளன.
இதற்கு முன் நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு, அவர் கூறியது எனக்கு கிரிக்கெட் தான் வாழ்க்கை கொடுத்தது என் வாழ்க்கையில் எதுவும் இல்லாத நிலையில் இருந்தேன் இப்போது எல்லாம் மாறி விட்டது என் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் பங்களாதேஷ் ரசிகர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இன்று ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியின் வெற்றி பாதையை தொடர்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் இதனால் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரராக தற்போது திகழ்ந்து வருகிறார்