தற்போது நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரில் ஷகிப் அல் ஹாசன் வங்கதேசத்தின் ஆதிக்கத்தை எடுத்துரைத்து வருகிறார். இவரது பேட்டிங் மற்றும் பௌலிங் பங்களிப்பின் மூலம் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கும் முன்னேறும் நோக்கில் தனது பயனத்தை செலுத்தியுள்ளது. இவ்வுலகக் கோப்பை தொடரின் 3வது வெற்றியில் ஷகிப் அல் ஹாசன் முக்கியமான அரைசதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்ததுடன் அந்த அணிக்கு இவரது பங்களிப்பு மிகவும் உறுதுணையாக இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஷகிப் அல் ஹாசன் மற்றும் முஷ்டபிசுர் ரஹீம் பங்களிப்பால் 50 ஓவர்கள் முடிவில் 262 ரன்களை குவித்தது. டாப் ஆர்டரில் லிட்டன் தாஸ் புதிதாக களமிறக்கப்பட்டார். ஆனால் இது தவறு என்பது பிறகுதான் தெரிந்தது. ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்து இவர் வெளியேறினார். பின்னர் இரு சிறப்பான பார்டனர் ஷீப் மற்றும் மொஷதிக் ஹோசைனின் பங்களிப்பால் வங்கதேசம் ஒரு சவாலான இலக்கை நிர்ணயித்தது.
ஆப்கானிஸ்தான் நிலைத்து விளையாடி 10.5வது ஓவரில் முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்தது. ஷகிப் அல் ஹாசன் முதல் விக்கெட்டாக ரஹ்மத் ஷா-வை வீழ்த்தினார். பின்னர் மொர்டஷா இரு சுழற்பந்துவீச்சாளர்களை பந்துவீச அழைத்தார். மொஷாதீக் ஹோசைன், ஹஸ்மதுல்லா ஷஹிடி-யையும், ஷகிப் அல் ஹாசன் மிகவும் அதிரடி பேட்ஸ்மேனான ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நைப்-ன் விக்கெட்டையும் வீழ்த்தினர். ஷமீல்லா ஷீன்ஹாரி தனது சிறப்பான பங்களிப்பை பேட்டிங்கில் அளித்தார். ஆனால் மறுமுனையில் அவருக்கு ஆதரவு பேட்ஸ்மேன் என யாரும் இல்லை. ஷகிப் அல் ஹாசன் மேலும் ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசையை சிதைத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நஜீபுல்லா ஜாட்ரானின் விக்கெட்டை இவர் வீழ்த்தியதன் மூலம் 5-விக்கெட்டுகளை இப்போட்டியில் வீழ்த்தினார். முஷ்டபிசுர் ரகுமான் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானின் கடைநிலை பேட்டிங்கில் இரு விக்கெட்களை வீழ்த்தினார்.
இதற்கிடையில் ஷகிப் அல் ஹாசன் தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தும் போது ஒரு அரியவகை சாதனையை உலகக்கோப்பை வரலாற்றில் படைத்தார். குத்புதீன் நைபின் விக்கெட்டை ஷகிப் வீழ்த்தியதன் மூலம், உலகக்கோப்பையில் 30 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இலங்கையின் சனாந்த் ஜெயசூர்யா இந்த சாதனைக்கு மிக அருகில் உள்ளார். அவர் உலகக்கோப்பை வரலாற்றில் 27 விக்கெட்டுகள் மற்றும் 1165 ரன்களையும் குவித்துள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஷகிப். இதற்கு முன் யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்திற்கு எதிராக 5 விக்கெட்டுகள் மற்றும் 50 ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் உலகக்கோப்பையின் ஒரு சீசனில் 400+ ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹாசன். 2019 உலகக் கோப்பையில் அதிக ரன் குவிப்பில் ஈடுபட்ட வீரர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹாசன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஷகிப் அல் ஹாசன் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்திறனை பயன்படுத்தி வங்கதேசத்தை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.