பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய மூன்று வகையான போட்டிகளிலும் சப்ராஸ் அகமது தான் கேப்டனான பதவி வகிக்கிறார். தன் வருகைக்கு பின் அணியை தூக்கி நிறுத்திய பெருமை இவரையே சாரும். யு-19 உலககோப்பை தோடரில் கூட அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையைக் கைப்பற்றி தந்தார் இவர். இவர் அணியில் அறிமுகமாவதற்கு முன்பு வரை அந்த அணியின் விக்கெட் கீப்பராக அக்மல் சகோதரர்கள் செயல்பட்டு வந்தனர். பேட்டிங்கில் அவர்கள் பெரிய வீரர்களாக இருந்தாலும் அவர்களின் கீப்பிங் சரியானதாக இல்லை. இதனாலே அந்த அணி பல போட்டிகளில தோல்வியைத் தழுவ நேரிட்டது. இதன் மூலம் அணியில் இணைய சப்ராஸ் அகமதுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் சில ஆண்டுகளிலேயே அணியின் கேப்டனாக உருவெடுத்தார் இவர். ஆனால் தற்போது இவரின் கேப்டன்ஷிப் தன்மை குறைய துவங்கியதால் இவரின் கேப்டன் பதவிக்கு புதிய வீரரை நியமிக்க உள்ளது அந்நாட்டு வாரியம் இது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் தற்போது ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக சப்ராஸ் அகமது பதவிவகிக்கிறார். கடந்த ஆண்டுவரை இவரின் பதவிக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அணியை நன்றாக வழிநடத்தி கொண்டிருந்தார். 2017 சாம்பியன்ஸ் ட்ரோபி வெற்றி மற்றும் டி 20 போட்டிகளில் நம்பர் 1 அணி என பாக்கிஸ்தான் அணிக்கு பல்வேறு சாதனைகளையும் கோப்பைகளையும் கைப்பற்றி தந்தார் இவர். இதன் மூலம் இவரே பாக்கிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் விரும்பினர் அதன்படியே இவரும் அணியை அனைத்து வகையான போட்டிகளிலும் தலைமை தாங்கினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாக்கிஸ்தான் ஆரம்பத்தில் சொதப்பினாலும் இறுதியில் சிறப்பாக ஆடி சற்று ரன் ரேட் வித்தியாசத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது பாக்கிஸ்தான். இதனால் இந்த வெளியேற்றத்தை பாக்கிஸ்தான் ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் மைதானத்திலேயே கொட்டாவி விட்டது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியது மற்றும் இவரின் பங்கு அணியில் அந்தளவுக்கு இல்லை. எனவே இவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கும்படி மீண்டும் சர்ச்சைகள் கிளம்பின.ஆனால் தற்போது உலகக்கோப்பை தொடருக்கு முன்பு கிட்டத்தட்ட தொடர்ந்து 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவியது பாக்கிஸ்தான் அதனால் மிகவும் கோபமான ரசிகர்கள் இவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கும்படி கருத்துக்கள் எழுந்தன. அப்போதைய நிலவரப்படி இவருக்கு அடுத்தபடியாக அணியின் கேப்டன் பதவிக்கு தகுதியானவராக கருதப்பட்டவர் சோஹிப் மாலிக். ஆனால் இவரோ அதிலிருந்து தற்போதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் விதமாக எந்த இனிங்க்ஸும் ஆடவில்லை. எனவே சப்ராஸ்-ன் கேப்டன் பதவி பாதுகாப்பானது.
இதன் விளைவாக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு மட்டும் இவரை கேப்டனாக வைத்துக்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரின் பதவியை பறிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட ஷான் மசூட் செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
மசூட் வெறும் 15 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.