ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிரபல டி20 கிரிகெட் தொடர் பிக் பாஷ் லீக் தற்பொழுது 8-வது சிசன் நடைபெற்று வருகிறது . ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் கிரிகெட் தொடர்களில் ஒன்று . எட்டு அணிகளைக் கொண்டு நடத்தபடும் இந்த தொடர் டிசம்பர் 19 ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 32 போட்டிகள் நடைப்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற 33 வது போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் அணியும் மோதினர் . இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன்படி களம் இறங்கி சிட்னி தண்டர் அணியின் கேப்டன் வாட்சன் மற்றும் டேவிச் இருவரும் முதலில் சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர்.
முதல் ஆறு ஒவரில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்களை சேர்த்தது . டேவிச் 26 ரன்கள் எடுத்து பென் கட்டிங் பந்தில் விக்கெட் இழந்தார். பின்னர் களம் இறங்கிய பெர்குசன் 18 ரன்னில் டாக்கெட் பந்தில் விககெட் இழந்தார். மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் சதம் விளாசினார் . வாட்சன் அனைத்து டி-20 தொடர்களிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். பிக் பாஷ் சிசன் -8 தொடரில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். வாட்சன் 62 பந்துகளை சந்தித்து அதில் 6 சிக்ஸ்களையும், 8 பவுண்டரிகளையும் விளாசினார் . இந்த தொடரில் தொடக்கதில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சதம் அடித்த நிலையில் 17.3 ஒவரில் முஜிப் பந்தில் விக்கெடை இழந்தார். பின்னர் களம் இறங்கிய சாம்ஸ் 18 ரன்னில் பென் கட்டிங் பந்தில் தனது விக்கெடை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய கிரிஸ் கிரீன் 14 ரன்களில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். பிரிஸ்பேன் அணியின் பென் கட்டிங் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். முஜிப் ஒரு விககெட்டும், டாக்கெட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சிட்னி தண்டர் அணி 20 ஒவர் முடிவில் 186 ரன்களை எடுத்தது. அதிக பட்ச ரன்னாக கேப்டன் வாட்சன் 100 ரன்கள் எடுத்தார். சிட்னி தண்டர் அணி 187 ரன்களை வெற்றி இலக்காக பிரிஸ்பேன் அணிக்கு நிர்ணயித்தது.
இந்த நிலையில் பிரிஸ்பேன் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது . தொடக்க ஆட்ட காரர்களாக மெக்கலம் மற்றும் மெக்ஸ் ப்ரையன்டு களம் இறங்கனர். கிரிஸ் ஜார்டன் பந்தில் பிரண்டன் மெக்கலம் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார் . அவர் சந்தித்த முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய அணியின் கேப்டன் கிரீஸ் லின் 4 ரன்னில் தனது விக்கெடை இழந்தார். பார்விந்தர் சாந்து வீசிய ஒவரில் லின் விக்கெடை பறிகொடுத்தார். 10 ரன்னில் இரண்டு விக்கெட்களை இழந்து பிரிஸ்பேன் அணி தடுமாறியது . ஆட்டம் மின்விளக்குகள் கோளாறால் சிறிது நேரம் ஒத்திவைக்கபட்டது. நிலமை சரியாகததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வாட்சன் வெளிப்படுத்தினார்.