ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் சிறந்த 3 ஆட்டங்கள் 

India v Sri Lanka - ICC Champions Trophy
India v Sri Lanka - ICC Champions Trophy

ஒருநாள் போட்டிகளில் இன்று உலகின் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவர் ஆவார் தவான். டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க தவறினாலும் ஒருநாள் போட்டிகளில் உலகம் முழுவதும் ரன் சேர்த்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரன் சேர்க்க தவறிய இவர் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் இவர் ஆசியகோப்பை தொடரில் சதம் உட்பட பல முக்கிய ஆட்டங்களுடன் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இவர் பங்கேற்ற ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு அதிக ரன் குவித்துள்ளது இவரே.

அதிவேகமாக 14 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தவான் 4 ஆம் இடத்தில் உள்ளார். 105 போட்டிகளில் 14 சதமடித்துள்ளார். கோலி (103 போட்டிகள்), வார்னர் (98 போட்டிகள்) மற்றும் ஆம்லா (84 போட்டிகள்) ஆகிய வீரர்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இப்பொழுது 15 சதம் அடித்துள்ள இவர் சேவாக்கின் சாதனையைச் சமன் செய்தார். இடது கை பேட்ஸ்மேனான இவர் இந்திய அணிக்கு அதிக சதம் அடித்தவர்களில் யுவராஜை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார். கங்குலி 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இங்கு ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானின் சிறந்த 3 ஆட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

#3 76 பந்துகளில் 73 ரன்கள் - 2015 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக. :

India v Pakistan - 2015 ICC Cricket World Cup
India v Pakistan - 2015 ICC Cricket World Cup

ஷிகர் தவான் பல சதங்கள் அடித்திருந்தாலும் இந்த ஆட்டமானது எதிரணியின் பவுலிங் மற்றும் அந்த ஆட்டத்தின் முக்கியதன்மையை கருத்தில் கொள்வதன் மூலம் 3 ஆம் இடம் பெறுகிறது.

அடிலெய்டில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மாவை 34 ரன்களுக்கு இழந்தது இந்தியா. இதன் பின்பு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் கோலி 129 சேர்த்தனர். இவர்களின் இந்த ஆட்டம் கடைசி கட்ட ஓவர்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்க்க உதவியது. இந்தப் போட்டியில் தாவன் 76 பந்துகளில் 73 ரன்களை சேர்த்து வெற்றிக்கு உதவினார்.

#2 94 பந்துகளில் 114 ரன்கள் - 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக:

South Africa v India - 2013 ICC Champions Trophy
South Africa v India - 2013 ICC Champions Trophy

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் தவான். ஒருநாள் அரங்கில் இவரது முதல் சதமும் இதுவே. இந்த ஆட்டத்தின் மூலம் உலக அரங்கில் தனது திறமையை நிரூபித்தார் தவான். 2010 ஆம் ஆண்டிற்கு பின்பு அணிக்குத் திரும்பிய இவர், 2013 ஆம் ஆண்டு ரோகித்துடன் கூட்டணி சேர்ந்து சாதிக்க தொடங்கினார். இப்போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் கூட்டணி 127 ரன்களை சேர்த்தது. இவர்களின் அடித்தளம்மூலம் இந்திய அணி 331 சேர்த்தது. தவான் 114 ரன்கள் குவித்தார்.

இந்தப் போட்டியில் முதல் 37 ஓவர்வரை வேகமாக ரன் சேர்த்த தவான் பின்பு டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோகித்-தவான் கூட்டணி இன்றளவிலும் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

#1 146 பந்துகளில் 137 ரன்கள் - 2015 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக :

South Africa v India - 2015 ICC Cricket World Cup
South Africa v India - 2015 ICC Cricket World Cup

தவான் ஐ.சி.சி தொடர்களில் சிறப்பாகச் செயல்பட கூடியவர். இந்த வரிசையில் முதலாவதாக இடம்பெற்றிருப்பதும் அந்தத் தொடரின் ஆட்டமே. தவானின் சிறந்த ஆட்டம் இதுவாகும். இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 137 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்கா அணியில் ஸ்டெயின், மார்கல், பிலாண்டர் மற்றும் தாஹிர் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் ஷர்மா 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின்பு தவான் பொறுப்பான ஆட்டத்தைக் கொண்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார். இவரின் ஆட்டம்மூலம் இந்திய அணி 307 ரன்கள் சேர்த்தது. முடிவில் இந்திய அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links