நடந்தது என்ன?
விரலில் ஏற்பட்ட காயத்தால் 3 வாரங்கள் ஓய்விலிருந்த ஷீகார் தவான் தற்போது உலகக்கோப்பை தொடர் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
இந்திய அணி உலகக் கோப்பையில் தனது இரண்டாவது தகுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஷீகார் தவானின் சிறப்பான சதம் மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்பினால் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டத்தின் தொடக்கத்தின் போது பேட் கமின்ஸ் வீசிய பந்து நேரடியாக அவரது கட்டை விரலை தாக்கியதன் காரணமாக இந்த காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவக் குழு உடனடியாக கண்காணிப்பில் ஏற்பட்டது. இந்த காயம் ஏற்பட்ட பின் தவான் அதிகம் தடுமாறினார். இருப்பினும் நிலைத்து விளையாடி சதம் விளாசினார். இவர் 109 பந்துகளில் 117 ரன்களை குவித்திருந்த போது எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழந்தார். தவான் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை.
ககைக்கரு:
ஷீகார் தவானிற்கு சிறு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், 2 வாரங்களுக்கு பின்னர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காயம் குணமாகாத காரணத்தால் தவான் உலகக்கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஏற்கனவே பிசிசிஐ கூறியிருந்தபடி ரிஷப் பண்டை சேர்த்துள்ளது.
தவான் காயமடைந்த அடுத்த இரண்டு நாட்களிலே ரிஷப் பண்ட் இங்கிலாந்து வரவழைக்கப்பட்டார். மான்செஸ்டரில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான தொடரின் வலைபயிற்சியில் ஈடுபடுவதுபோல் ரிஷப் பண்ட் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 21 வயது விக்கெட்-கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தற்போது 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணியில் இனைந்துள்ளார்.
பிசிசிஐ நிர்வாகக் குழு கூறியதாவது,
பல மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி ஷீகார் தவான் ஜீலை மாதத்தின் தான் குணமடைவார் என கூறியுள்ளனர். எனவே தற்சமயம் உலகக்கோப்பை தொடரின் மற்ற போட்டிகளிலிருந்து ஷீகார் தவான் விலகுகிறார்!
இந்திய வீரர்கள் சவுத்தாம்டனில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது தவான் இருந்தார் ஆனால் பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. அவரது இடதுகை விரலில் கட்டு போடப்பட்டிருந்தது. இதைக் காணும் போதே தெரிந்தது இவர் மருத்துவர்களின் இறுதி முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளார் என நமக்கு தெரிந்தது.
இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த உடனேயே லீட்ஸ் நகருக்கு சென்று மருத்துவர்களிடம் சோதனை செய்து வந்தார். அப்போது நூழிலை காயம்தான் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையே இந்திய பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபேர்ஹார்டும் உறுதி செய்தார். இதனால் தவான் கூடிய விரைவில் குணமடைந்துவிடுவார் என இந்திய தேர்வுக்குழு மாற்று வீரர் என யாரையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்.
அடுத்து என்ன?
ஷீகார் தவானின் விலகலினால் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா-வுடன் தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்குவார். தவானிற்கு மாற்று வீரராக களம் கண்டுள்ள ரிஷப் பண்டிற்கு ஆடும் XIல் வாய்ப்பு கிடைப்பது கடினமே.
இந்திய அணி 2019 உலகக்கோப்பையில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான போட்டி மட்டும் மழையினால் தடையானது. இந்திய அணி அடுத்த போட்டியில் ஜீன் 22 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.