மே31 அன்று டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த 2019 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியிலேயே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் மோசமான முறையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் கடுப்பான முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தற்போதைய கேப்டன் சஃப்ரஸ் அகமதுவின் மேல் கடும் கோபத்தை வெளிபடுத்தி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், சஃப்ரஸ் அகமதுவின் மோசமான உடல்நிலை மற்றும் சமீப காலங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மேற்கிந்தியத் தீவுகளின் பௌலிங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் மானத்தையே சஃப்ரஸ் அகமது அவமானப்படுத்தி விட்டதாகவும் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரில் குறிப்பிடும்படியாக வெளிப்படுத்தியது. மொத்தமாக 22 ஓவர்களுக்கும் குறைவாகவே பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து ஆல்-அவுட் ஆனது. மேற்கிந்தியத் தீவுகள் 14 ஓவர்களிலே 106 ரன்களை சேஸிங் செய்து இலக்கை எட்டியது. ஷார்ட ஃபிட்ச் பௌலிங்கிற்கு சாதகமான மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தான் பேட்டிக்கை குறிவைத்து தகர்த்தது. ஒஸானே தாமஸ் மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 21.4 ஓவர்களை மட்டுமே பாகிஸ்தான் எதிர்கொண்டு 105 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இது உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் இரண்டாவது குறைவான ரன்களாகும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.4 ஓவர்களிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் 50 ரன்களை எடுத்தார். இவர் தனது அரைசதத்தை அடைய 33 பந்துகளை எடுத்துக் கொண்டார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அரைசதம் அடித்த பிறகு அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை முகமது அமீர் வீசிய பந்தில் இழந்தார். பின்னர் களமிறங்கிய அதிகம் மதிப்பிடப்பட்ட நிக்கலஸ் பூரான் வாஹாப் ரியாஜ் ஓவரில் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு பெரிய சிக்ஸரை விளாசி தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். முகமது அமீர் மட்டுமே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானிற்கு ஏற்பட்ட ஒரே நன்மை இதுவாகும். 2017 சேம்பியன் டிராபியின் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது அமீர் அதன் பின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமது கூறியதாவது,
"பாகிஸ்தானின் பேட்டிங் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. போட்டி தொடங்கும் முன்பாக பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்தான் சிறப்பாக உள்ளது என நான் நினைத்திருந்தேன். ஆனால் ஷார்ட் ஃபிட்சில் பேட்ஸ்மேன்கள் சரியாக பந்தை எதிர்கொள்ள தவறிவிட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பௌலிங்கிற்கு முழு வெற்றியும் சேரும். அவர்கள் மிகவும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர்.
சோயிப் அக்தர் பாகிஸ்தானின் ஆட்டத்தைக் கூட கண்டு கொள்ளவில்லை. ஆனால் சஃப்ரஸ் அகமது மோசமான உடல் தகுதியுடன் எதற்காக விளையாடினார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை ஒரு கானோளி போன்று வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
அதில் சோயிப் அக்தர் கூறியதாவது,
"சஃப்ரஸ் அகமது டாஸ் போட வரும் போதே இடுப்பு வலியுடன் தான் வந்தார். அவரது முகம் வாடிய நிலையில் தான் இருந்தது. சரியான உடற்தகுதியின்றி விளையாடிய ஒரே கேப்டன் இவர் தான். இவரால் சரியான ஆட்டத்திறனை வெளிபடுத்த இயலவில்லை. அத்துடன் விக்கெட் கீப்பங்கிலும் சரியாக கவணம் செலுத்த முடியாமல் மோசமாக விக்கெட் கீப்பங் செய்தார்"