ஹார்திக் பாண்டியா மற்றும் கபில்தேவ்.... இல்லை இல்லை இங்கு முதலில் கபில்தேவ் மற்றும் ஹார்திக் பாண்டியா என்று கூறுவதே பொருந்தும். ஏனென்றால் கபில்தேவ் என்ற பெயர் கிரிக்கெட்டின் அடையாளம் ஆனதே வேறு கதை. 90's குழந்தைகளுக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படியோ 20's குழந்தைகளுக்கு விராட் கோலி எப்படியோ அதைப்போன்று தான் 70's குழந்தைகளுக்கு கபில்தேவ்.... சரி சரி விஷயத்திற்கு வருவோம்..... ஹார்திக் பாண்டியா அடுத்த கபில்தேவ் ஆவது சாத்தியமா?
ஹார்திக் பாண்டியா:
2015-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில், தோல்வியின் விளிம்பில் இருந்தது. மும்பை ரசிகர்கள் போட்டி முடிவுற்றது என வருந்தும்போது தான் ஒரு வீரர் களம் காணுகிறார். நான் முதலில் அவரை பார்க்கும் பொழுது உண்மையில் அவர் ஒரு மேற்கிந்திய வீரர் என்றே எண்ணினேன் காரணம் அவரது தோற்றம் எனக்கு அப்படி தோன்றியிருக்கலாம். பிறகு தான் என் சகோதரர் கூறினார் அந்த இளைஞன் நமது நாட்டை சார்ந்தவர் என்று. முன்னனி வீரர்களே விக்கெட்டை பறிகொடுத்திருக்க இவர் என்ன செய்யப்போகிறார் என நினைக்கையில் தனது அபாரமான ஆட்ட திறமையால் பௌண்டரிகளாக விளாசியதுடன் மும்பை அணியையும் வெற்றி பெற செய்தார். அன்று அவரை முதல் மும்பை ரசிகர்கள் மட்டுமல்லாது மொத்த இந்தியாவும் கொண்டாடி தீர்த்தது.
தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டி:
ஆனால் அப்போது யாரும் எண்ணவில்லை இவர்தான் அடுத்த கபில்தேவாக இருப்பார் என்று. ஐபிஎல் அதனைத்தொடர்ந்து சர்வதேச அளவிலான T20 போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என இருந்தவருக்கு கிட்டியது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணியில் இடம். இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்து விட்டாலே அவர்களை டெஸ்ட் போட்டி விளையாடும் வீரர்களாகவே கருத தொடங்கிவிடுவர். உதாரணத்திற்கு முரளி விஜயை கூறலாம். ஆனால் அவர் உலகத்தரம் வாய்ந்த T20 வீரர் என்பது வேறு கதை.
அந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க களம் கண்டார் ஹார்திக் பாண்டியா. அந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ்-ல் அவர் அடித்த 93 ரன்கள் தான் அவரை கபில்தேவ் உடன் ஒப்பீடு செய்யும் அளவிற்கு உயர்த்தியது. அந்த 93 ரன்களும் வெறும் 95 பந்தில் அடிக்கப்பட்டது தான். அதில் 14 பௌண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். பிறகு அவருடைய பௌலிங் திறனும் வளர்ச்சியுற்றது.தற்பொழுது உலகின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி:
இதைப்போன்று 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை நோக்கி பயணிக்கும் போது அவர் அடித்த 76 ரன்களும் இன்று வரை அவரது புகழ்பாடும். இதில் 4 பௌண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.
மேலும் இங்கு நான் அவருடைய சிறப்பான ஆட்டங்களை குறிப்பிட்ட மறந்திருக்கலாம் அல்லது நான் அவரது சிறப்பான ஆட்டங்களை காணாமல் இருந்திருக்கலாம்.
இருப்பினும் அவரை அடுத்த கபில்தேவ் என்று கூறுவது பொருத்தமாகுமா? அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.....
மேலும் இது போன்ற பல சுவாரசியமான கட்டுரைகளுக்கு எங்களை பின்தொடர்க......