2019 ஐபிஎல் தொடர் இந்தியாவில் கலைகட்ட தொடங்கியுள்ளது. 2019 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மார்ச் 23 அன்று தொடங்கி மே 5 வரை நடக்கவிருக்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொரு அணியிலும் நிகழ்த்தப்பட்டு தற்போது சிறந்து விளங்கும் வீரர்களை தம் பக்கம் இழுத்துள்ளது ஐபிஎல் அணிகள்.
2019 ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் 2019 உலகக் கோப்பை தொடர் ஆரமிப்பதால் பெரும்பாலும் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் சர்வதேச அணிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது பயிற்சியை ஆரம்பித்து விடுவர். எனவே மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இதனாலேயே க்ளேன் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற டி20 நட்சத்திர வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.
டி20 போட்டிகளில் தொடக்கம் சிறப்பாக இருந்தால் மட்டுமே ஒரு அணியால் வெற்றி பெற மேடியும். எனவே ஒவ்வொரு அணியும் தொடக்க வீரர்களாக களமிறங்குபவர்களை சரியாக தேர்வு செய்யும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் டெல்லி கேபிட்டள்ஸ் அணியிடம் பரிமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் அந்த அணியின் தொடக்க வீரருக்கான இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரெய்டர்ஸை போல ரஷித் கான்-ஐ டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறக்குமா என்று ஒ ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. கௌதம் காம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோது சுனில் நரைனை தொடக்க வீரராக களமிறக்கினார். அவரும் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது அதிரடியை வெளிபடுத்தினார். 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் ரஷித்கான் தனது அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20யில் ரஷித் கானின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 125ஆகவும், ஐபிஎல் தொடரில் 175 ஆகவும் உள்ளது. இது டாப் பௌலர்களை எதிர்கொள்ள ஒரு சரியான ஸ்ட்ரைக் ரேட்டாக பார்க்கப்படுகிறது. ரஷித் கான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரது வலது-இடது பேட்டிங் கலவை அதிரடியாக ரன்களை குவிக்கும் வகையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அமையும். இருவர்களது இயல்பான ஆட்டம் அந்த அணிக்கு அதிரடி தொடக்கமாக அமையும்.
ரஷித்கான் தற்போதைய சிறந்த டி20 பௌலராக திகழ்கிறார். உலகின் அனைத்து இடங்களிலும் நடைபெறும் டி20 லீக்கில் பங்கேற்று வருகிறார். இவர் சமீபத்தில் முடிந்த டி10 லீக்கில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்-டை விளாசினார். ரஷித்கானை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக களமிறக்கினால், அந்த அணியில் கடந்த ஐபிஎல் தொடரில் இருந்த சில குறைகள் களையும்.
ரஷித்கான் தற்போது சர்வதேச ஓடிஐ ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை மற்றும் சர்வதேச டி20 பௌலர் தரவரிசையிலும் முதல் இடத்தை வகிக்கிறார். எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் ரஷித்கானை தொடக்க வீரராக களமிறக்கி அவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.