நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெறுவாரா ?

Subman Gill

நடந்தது என்ன ?

இந்திய அணி சமீபத்தில் கண்டெடுத்த சிறந்த இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில். இவர் தற்போது நியூசிலாந்து தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் விளையாடும் XIல் இடம்பெறுவாரா ? என கிரிக்கெட் ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

நேற்று (ஜனவரி 23) இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலி-க்கு நியூசிலாந்திற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் டி20 தொடரிலும் ஓய்வு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்திய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் எனவும் , ஆஸ்திரேலியாவிற்கெதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி மீண்டும் அணியில் இணைவார் எனவும் கூறப்பட்டுள்ளது. கோலிக்கு மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு தெரியுமா ?

விஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் சமீபத்தில்தான் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா-விற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.

கே.எல்.ராகுல் இல்லாததால், தற்போதைய இந்திய அணியில் வேறு யாருமே நம்பர்-3 மாற்று ஆட்டக்காரர்கள் இல்லை. எனவே அவருக்கு பதிலாக இந்திய அணியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சுப்பன் கில் , விராட் கோலிக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார். இவருடைய ஆட்டத்திறனும் பிரம்பிக்க வைக்கும் நிலையில்தான் உள்ளது. 2018ன் தொடக்கத்தில் சுப்மன் கில் பங்களிப்பில் இந்திய அணி U-19 உலகக் கோப்யை வென்றது. U-19 உலகக் கோப்பையில் சுப்மன் கில் நம்பர்-3 பேட்ஸ்மேனாகத்தான் களமிறங்கி அருமையான ஆட்டத்திறனை வெளிபடுத்தினார்.

கதைக்கரு

விராட் கோலி-யை போன்று உலகில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று வருகின்றனர். வருங்கால கிரிக்கெட் போட்டியையும் மற்றும் உலகக்கோப்பை போட்டிகளையும் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலிக்கு வேலை பளுவை குறைக்கும் வகையில் அவருக்கு நியூசிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வளித்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விட்டு அப்படியே நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரில் பங்கேற்று முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனே பூம்ரா-விற்கு பிசிசிஐ ஓய்வளித்தது. தற்போது விராட் கோலிக்கும் ஓய்வளித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததால் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் இந்திய அணியில் இணைந்தனர். தற்போது விராட் கோலி-க்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. எனவே சுப்மன் கில் இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.

அடுத்தது என்ன ?

இந்திய அணி தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய கேப்டன் விராட் கோலியின் தலைமையிலேயே இந்திய அணி தொடரை வென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil