Create

சிவா சிங் வீசிய 360° பந்து... சரியா தவறா? ஓர் அலசல்!!

360 டிகிரி பந்து வீசிய சிவா சிங்
360 டிகிரி பந்து வீசிய சிவா சிங்

காலத்திற்கு ஏற்ப மாறி வரும் கிரிக்கெட் விளையாட்டில் யுக்திகளும், வீரர்களின் அணுகுமுறையும் அதற்க்கேற்ப மாறி வருகிறது. பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் ஆட்டத்தை வித்தியாசமாக அணுக துவங்கிவிட்டனர்.

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளப் பல புதிய திறமைகளை வளர்த்து உள்ளனர். திரும்பி அடிப்பது, உட்கார்ந்து அடிப்பது, வித்தியாசமான ஸ்டான்ஸ் எடுத்து நிற்பது (சமீபத்தில் ஜார்ஜ் பெய்லே) எனப் பல புதிய யுக்திகளை கையாண்டு தங்களது ஆட்டத்தை மேம்படுத்தி உள்ளனர்.

அது போக, ஐசிசி வகுத்துள்ள தற்போதைய விதிகள் முற்றிழுமாகப் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பந்து வீச்சாளர்கள் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பந்து வீச்சாளர்களும் வித்யாசமாக ஏதாவது செய்து பேட்ஸ்மேன்களை வீழ்த்தத் தயாராக வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவாதம் தற்போது அடுத்த நிலைக்கு மாறிச் சென்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான சிகே நாயுடு கோப்பை தொடரில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்கம் மற்றும் உத்திர பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில், உத்திர பிரதேச அணியைச் சேர்ந்த சிவா சிங் என்ற இளம் இடது கைச்சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் பந்து வீசும்போது வீச்சின் போக்கு மாறாமல் 360° சுழன்று வந்து பந்து வீசினார்.

இதனைப் பார்த்த நடுவர் உடனடியாகப் பந்து செல்லாது என அறிவித்துவிட்டார். பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ, இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 'இதனைச் சரியாகப் பாருங்கள், வித்யாசமாக உள்ளது' எனப் பதிவிட்டிருந்தார்.

பின்னர் யுவராஜ் சிங் அதனைப் பதிவிட, முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் அதில் ஒரு சர்ச்சை கமெண்டை பதிவு செய்தார்... அதாவது 'இவர்களெல்லாம் பந்தைக் கொத்தி எறிபவர்கள் (Chuckers) எனக் கமெண்ட் செய்தார்'

இதனால் இந்த விசயம் விவாத மேடைகளிலும், கிரிக்கெட் உலகிலும் அரங்கேறியது....

இதில் சரியான பார்வை...என்னவென்றால்... ஐசிசி விதிகள் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக மாறிவிட்டது. ஒரு இன்னிங்சிற்கு இரண்டு பந்து என அறிவித்ததில் ரிவர்ஸ் ஸ்விங் பறிபோனது. பவர்பிளே மாற்றங்களினால் பந்து வீச்சாளர்கள் எங்கு வீசினாலும் அடிக்கப்படுகிறார்கள்.

20 ஓவர் கிரிக்கெட்டினால் பேஸ்ட்மேன்கள் பல வித்தியாச ஷாட்களை மைதானத்திற்குள் அழைத்து வந்தனர்.இவை அனைத்துமே பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் திரும்பியது. இதனால் பந்து வீச்சாளர்கள் வித்யாசமான பாதைக்குத் திரும்புவது மிகவும் அவசியமாகிவிட்டது.

எடுத்துக்காட்டாக ஜஸ்பிரிட் பும்ராவை எடுத்துக்கொள்வோம், அவர் வீசுவது மிக வித்தியாசமாக உள்ளது. அப்படி அவர் வித்தியாசமாக வீசுவதுதான் 60% அவரை சிறந்த பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது.

90களில் பால் ஆடம்ஸ், தற்போது இரு கைகளிலும் பந்து வீசும் அக்சய் கரன்வீர், கமிந்து மென்டிஸ், தமிழகத்தின் மோஹித் ஹரிஹரன் என பலர் வித்தியாசமான முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் பார்த்தால் சிவா சிங் வீசியதில் எந்த பெரிய வித்தியாசமும் தவறு இல்லையெனச் சொல்லலாம்.


ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது என்றால்...

விதி 20.4.2.1ன் படி...

பேட்ஸ்மேனை ஏமாற்றும் வகையில் பந்து வீசினால் அது நியாயமற்றது, செல்லாதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பார்த்தால் ஒரே ஓவரில் இரு கைகளிலும் வீசுவது தவறுதான்.

மேலும், மற்றோரு விதி கூறுவது என்னவென்றால்...

பந்துவீச்சாளர் பந்து வீசும்போது பந்து வீச்சின் போக்கு மாறாமல் வீச வேண்டும் (Without changing the momentum of the ball and bowler). சிவா சிங் வீசும்போது பந்தின் வீச்சு மாறாமல் எந்த ஒரு இடத்தில் நிற்காமல் அப்படியே சுழன்று பந்து வீசினார். விதிப்படி இது சரியான ஒரு பந்து தான். இதில் இந்த விதிப்படி பார்த்தாலும் ஸ்லோவர் பந்துகளை வீசுவதும் தவறு என்றாகிறது. ஆனால் பந்தின் வீச்சு மாறாமல் யாரும் வீசுவதில்லை.

இதனால் சிவா சிங் செய்தது சரியான ஒன்று தான். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் வீசும்போது பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்களின் கவனத்தை சிதைக்க அங்கும் இங்கும் நகர்ந்து ஆடுகின்றனர். இதனைப் பந்து வீச்சாளர்கள் செய்தால் தவறு என்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. இதனை ஐசிசி பரிசீலனை செய்ய வேண்டும்.

Edited by Fambeat Tamil
Be the first one to comment