தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் சற்று தடுமாற்றத்துடன் தொடங்கியது. எல்கர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய அனுபவ வீரர் அம்லா 3 ரன்னில் அவுட் ஆக தென் ஆப்ரிக்கா அணி தொடக்கத்தில் தடுமாறியது. அதன் பின்னர் களம் இறங்கிய தெம்பா பவுமா மற்றும் டூப்ளஸிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டமும், டி காகின் அதிரடியான 80 ரன்களும் தென் ஆப்ரிக்கா அணி 235 ரன்களை சேர்க்க உதவின. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா அணி 235-10 எடுத்தது.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி தொடக்க வீரர்களாக திமுல் கருணரத்னே மற்றும் திரிமனே இருவரும் களம் இறங்கினர். திரிமனே ஸ்டைன் பந்தில் டக் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய ஓஷாடா பெர்னாண்டோ 19 ரன்னில் ஸ்டைன் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய குஷல் மென்டிஸ் 12 ரன்னில் பிலாண்டர் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி திமுல் கருணரத்னே 30 ரன்னில் பிலாண்டர் பந்தில் அவுட் ஆகினார். குஷல் பெரேரா நிலைத்து விளையாடி அரைசதம் கடந்தார். பின்னர் வந்த டிக்குவெல்லா 8 ரன்னில் ஓலிவேர் பந்தில் அவுட் ஆகினார். தனஞ்ஜேயா டி சில்வா 23 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். இலங்கை அணி 133 -6 ரன்களில் தடுமாறிய போது குஷல் பெரேரா 51 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த போட்டியில் ஸ்டைன் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியதன் முலம் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறினார். இங்கிலாந்து அணி வீரர் ப்ராட் சாதனையை சமன் செய்தார்.
அடுத்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். மார்கரம் 28 ரன்னில் ரஜிதா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய அம்லா 16 ரன்னில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பவுமா 3 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த டூப்ளஸிஸ் மற்றும் டி காக் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 126 ரன்களை சேர்த்தது. தென் ஆப்ரிக்கா அணி 170 ரன்கள் முன்னிலையில் உள்ளது.