இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இருஅணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன் படி முதலில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜீத் ராவல் மற்றும் டாம் லேதம் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் இந்த ஜோடி நிலைத்து விளையாடினாலும் 27வது ஓவரில் டாம் லேதம் 30 ரன்னில் அகிலா தனஜெயா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதே ஓவரில் டக்அவுட் ஆகினார். நியூசிலாந்து அணி 64-2 என்ற நிலையில் இருந்தது. அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ஜீத் ராவலும் 33 ரன்னில் தனஜெயாவின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ராஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் நிலைத்து விளையாடினர்.
இந்த ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் நிக்கோலஸ் 42 ரன்னில் தனஜேயா பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய வாட்லிங் 1 ரன்னில் அடுத்த ஓவரிலேயே தனஜெயா பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க ராஸ் டெய்லர் மட்டும் 86 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 249 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அகிலா தனஜெயா 5 விக்கெட்களையும் லக்மல் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருனரத்னே மற்றும் திரிமானே இருவரும் களம் இறங்கினர். இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே திரிமானே 10 ரன்னில் ஆஷிழ் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய குசல் மென்டிஸ் நிலைத்து விளையாட கேப்டன் கருனரத்னே 39 ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் மென்டிஸ் உடன் இணைந்த மேத்தியூஸ் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். குசல் மென்டிஸ் அரைசதம் விளாசிய 53 ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் அவுட் ஆகினார். குசல் பெரேரா 1 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகிய நிலையில் அதன் பின்னர் களம் இறங்கிய தனஜெயா டி சில்வா 5 ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டிக்குவேல்லா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மேத்தியூஸ் 50 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து டிக்குவேல்லா 61 ரன்னிலும் லக்மல் 40 ரன்களும் அடித்த நிலையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 267 ரன்கள் எடுத்தனர்.