கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது டெஸ்ட் போட்டி தான். மிகவும் பழமை வாயந்த போட்டியும் இதுவே. தற்போதைய காலகட்டங்களில் 5 நாள் கொண்ட டெஸ்ட் போட்டி நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் முடிவுக்கு வந்து விடுகிறது. ஆனால் அப்போதைய காலகட்டத்தில் டெஸ்ட் பேட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஆர்வமே காட்ட மாட்டார்கள். பெரும்பாலான போட்டிகள் முடிவுகள் இன்றியே முடிவடையும். டெஸ்ட் போட்டியை பொருத்த வரை வீரர் அணியின் அணியின் சூழ்நிலையை அறிந்து நிதானமாக ஆட வேண்டும். அப்படி தான் பல வீரர்கள் விக்கெட்டையும் இழக்காமல் ரன்களும் அதிகமாக குவிக்காமல் களத்திலேயே அதிக நேரம் இருப்பார்கள். அவ்வாறு ஆமை வேகத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்பட்ட சில இன்னிங்ஸ்களை இங்கு காணலாம்
#1) ராகுல் டிராவிட் ( 96 பந்துகளில் 12 ரன்கள் - ஸ்ரைக்ரேட் 12.50 )
இந்திய அணியின் டெஸ்ட் வீரர் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருபவர் ராகுல் டிராவிட் தான். டெஸ்ட் போட்டிகளில் இவரது விக்கெட்டினை வீழ்த்த எதிரணி பந்து வீச்சாளர்கள் கதிகலங்குவர். இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வகை போட்டிகளிலும் 10,000 ரன்களை கடந்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 96 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே குவித்தார். இதன் மூலம் அந்த போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்ல் இந்திய அணி 664 ரன்களும், இங்கிலாந்து அணி 345 ரன்களுக்கு குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#2) ஏபி டிவில்லியர்ஸ் (244 பந்துகளில் 25 ரன்கள் - ஸ்ரைக்ரேட் 10.24 )
ஏபி டிவில்லியர்ஸ் பெயரைக் கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது அவரின் 360° ஷாட்கள் தான். அதுமட்டுமின்றி அதிரடிக்கு பெயர்போன இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் மற்றும் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவ்வாறு அதிரடியைக் காட்டும் இவரால் டெஸ்ட் போட்டிகளில் நிலைத்தும் ஆட முடியும் என நிரூபித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்க அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ்ல் 486 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்துவது மிகவும் கடினம் எனவே நிலைத்து ஆடி போட்டியை டிரா செய்ய ஏபி டிவில்லியர்ஸ் தொடர்ந்து போராடினார். ரன்களே எடுக்க அவர் முற்படவில்லை. 244 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ஆனால் இறுதியில் ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். இதனால் தென்னாப்ரிக்க அணி போட்டியை 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது. இருப்பினும் ஏபி டிவில்லியர்ஸ்-ன் இந்த இன்னிங்ஸ்ல் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்ல் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.