உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை மறுதினம் முதல் துவங்க உள்ளது. எனவே, பல்வேறு அணிகளும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், நியூசிலாந்து அணியும் இலங்கை அணிக்கு எதிராக இரு போட்டிகளை உள்ளடக்கிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. மீண்டும் நியூஸிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல், சோமர்வில்லி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இரு வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணியின் இவ்விரு வீரர்களும் சிறப்பாக பங்காற்றியுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டி முதல் காயத்தால் ஓய்விலிருந்த ஆல்ரவுண்டர் சேண்ட்னர் அணியில் இணைந்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கண்ட டோடு ஆஸ்ட்லே அணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கண்டு ஆஸ்ட்லே 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மிகநெருக்க வெற்றி பெற்றது. அதன் பின்னர், நடைபெற்ற தொடரை நிர்ணயிக்கும் போட்டியில் 34 வயதில் அறிமுகம் கண்ட சோமர்வில்லி 7 விக்கெட்களும் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்களையும் கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, நியூசிலாந்து.
இலங்கை சீதோசன நிலைகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறக்குவதன் மூலம் மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடுமென நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டேட் கூறியுள்ளார்.
மேலும், இவர் கூறியதாவது,
"இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட இங்கிலாந்து அணி விளையாடி வெற்றியை கண்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும்கூட மிதவேக பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியது".
அணியில் உள்ள பிரதான பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், டிம் சவுதி மற்றும் நீல் வாக்னர் ஆகியோருடன் காலின் டிகிராண்ட் ஹோமும் அணியில் உள்ளார். இதனால் உலக கோப்பை தொடரில் சிறந்து விளங்கிய பெர்குசன் இந்த தொடரில் அறிமுகம் காண்பதில் சற்று சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் நடைபெறும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம் இவரது அறிமுகத்தை எதிர்நோக்கலாம்.
பலமிக்க பந்துவீச்சு தரப்பை போலவே பேட்டிங் தரப்பும் வளம் மிகுந்து காணப்படுகிறது. அணியின் பிரதான விக்கெட் கீப்பரான வாட்லிங்கிற்க்கு மாற்று வீரராக டாம் லதாம் இணைக்கப்பட்டுள்ளார். 9 அணிகளை உள்ளடக்கி இருவருடங்களுக்கு நடத்தப்படும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால், கூடுதல் உற்சாகமும் புத்துணர்வும் அடைவதாக கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
மேலும், இவர் கூறியதாவது,
"இந்த இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்புபெற்ற ஒவ்வொரு அணியும் தங்களது சிறந்த போராட்டத்தினை வெளிப்படுத்தும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், தொடங்கிய உலக கோப்பை தொடரில் நடை பெற்றது போல, திடீர் சவால்களை நாங்கள் எதிர்கொள்ள காத்திருக்கிறோம். நீண்ட காலத்திற்கு நடைபெற உள்ள இந்த தொடரின் வாய்ப்பினை பயன்படுத்தி சவால்களை சந்திக்க உள்ளோம். உலகம் முழுக்கும் உள்ள பல்வேறு அணிகளின் பல்வேறு வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இந்த புதுவகையான போட்டியில் தங்களை ஈடுபடுத்துவர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்றார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வருமாறு,
கனே வில்லியம்சன், டாம் பிலெண்டல், டிரென்ட் போல்ட், காலின் டிகிராண்ட்ஹோம், டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், அஜாஸ் பட்டேல், ஜீத் ராவல், வில் சோமர்வில்லி, மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பி.ஜே.வாட்லிங்.