இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை பற்றி தெரியுமா?

Guru
Ganguly
Ganguly

சௌரவ் சந்திதாஸ் கங்குலி இவர் தான் தாதா என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்திய அணியின் மூத்த வீரரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் ஆவார். சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த பேட்ஸ்மானகவும், அணி தலைவராகவும் விளங்கினார். வலது புறத்தில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் . எனவே இவர் காட் ஆப் தி ஆப் சைடு என அழைக்கப்படுகிறார்.

இவர் ஒரு நாள் போட்டிகளில் 311 போட்டிகளில் 11363 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 22 சதம் மற்றும் 72 அரை சதம் அடித்திருக்கிறார். ஒரு நாள் அரங்கில் இவரின் அதிக பட்ச ரன்183 ஆகும்.சவுரவ் கங்குலி பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் பந்து வீச்சிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்பொழுது இந்திய ப்ரிமியர் லீக் போட்டிகளை நிர்வகிக்கும் நான்கு பேர்கொண்ட குழுவில் ஒருவராகத் திகழ்கிறார். இவர் உச்ச நீதிமன்றத்தினால் ஜனவரி25இல் நியமனம் செய்யப்பட்டார் இந்தியன் பிரீமியர் லீக்கின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

சௌரவ் கங்குலி, இவரின் மூத்த சகோதரர் சினேஹாசிஷால் கிரிக்கெட் உலகத்திற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். நவீன கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகச் சிறந்த அணித் தலைவராகக் கருதப்படுகிறார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் கிரிக்கெடில் சிறந்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். இவரின் பள்ளிக்கூட கிரிக்கெட் அணி மற்றும் மாநில கிரிக்கெட் அணிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது எட்டாம் இடத்திலும் , 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளார். விசுடம் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002 ஆம் ஆண்டில் அளித்த தரவரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், பிறயன் லாறா, டீன் ஜோன்ஸ் மற்றும் மைக்கேல் பெவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் இவரின் பெயரை அறிவித்தது.

"DADA" Ganguly

இந்தியத் கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி வந்தார். பின் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 131 ரன்கள் அடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இலங்கைத் கிரிக்கெட் அணி, பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியத் கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் இந்திய அணியில் இவரின் இடம் நிரந்தரமானது. 1999 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் இவரும் ராகுல் திராவிட்டும் இணைந்து 318 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர். தற்போது வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் எழுந்த சூதாட்டப் புகார் பிரச்சினைகள் மற்றும் உடல்நிலை மோசமான காரணத்தினால் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகினார். இதனால் தலைவர் பொறுப்பு கங்குலியிடம் வந்தது. 2002 ஆம் ஆண்டின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இவரின் மேலாடையைக் கழற்றியது மற்றும் வெளிநாடுகளில் அணி தோல்வியைத் தழுவியது போன்ற காரணங்களினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். இவரின் தலைமையில் இந்திய அணி 2003 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியத் கிரிக்கெட் அணியிடம் வீழ்ந்தது. இந்தியக் குடிமை விருதுகளில் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதை 2004 இல் பெற்றார்.

Quick Links