கதை என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 துணை கேப்டனான ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறங்க அனுமதிக்குமாறு இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கிரிக்கெட் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார். 47 வயதான சவுரவ் கங்குலி கூற்றுப்படி, துணை கேப்டனான ரோகித் சர்மா தனது உலகக் கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்திருந்தார். எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோதித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறார்.
உங்களுக்குத் தெரியாவிட்டால் ...
தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தபோதிலும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தொடக்க வீரராக களமிறங்காமல் இருக்கின்றார். அவரது சரளமான ஸ்ட்ரோக்-பிளே, நுட்பம் மற்றும் கொடூரமான ஷாட் விளையாடும் திறன் ஆகியவை கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவரது நிலையை உறுதிப்படுத்த வழிவகுத்துள்ளன.
சமீபத்தில், ஸ்டைலான தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா உலகக் கோப்பை தொடரில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார். இருப்பினும், தான் அறிமுகமானதில் இருந்து டெஸ்ட் தொடரில் ஒரு இடத்தைப் பெற அவர் தவறிவிட்டார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடததால் ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதே நேரத்தில் ஒரு காயம் மற்றும் அவரது குழந்தையின் பிறப்பு ஆகியவை கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் அவரை விளையாட்டிலிருந்து ஒதுக்கி வைத்தன.
இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் வியக்கத்தக்க அற்புதமான நிலைமைக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான மற்றொரு வாய்ப்பை தேர்வாளர்கள் ரோகித் சர்மாவுக்கு வழங்கியுள்ளனர்.
முக்கிய தகவல்
தனது கிரிக்கெட் வாழ்க்கையின் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா ஒரு நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக பயன்படுத்தப்பட்டார். இந்த முறையும், அஜின்கியா ரஹானே மற்றும் ஆல்ரவுண்டர் ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸுடனான முதல் டெஸ்ட் தொடரில் 5 மற்றும் 6 வது இடத்தைப் வழங்கப்பட்டது. இருப்பினும், ரோகித் சர்மாவை தொடக்கத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி கருதுகிறார்.

"உலகக் கோப்பையில் இருந்து ரோகித் தனது நல்ல வடிவத்தைத் தொடரவும், தொடக்க ஆட்டக்காரர்களில் குடியேறவும் அனுமதிக்க வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும்" என்றார் கங்குலி.
அடுத்தது என்ன?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைத்து இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து இரண்டாவது ஆட்டம் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.