தென்ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் , ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி தென்ஆப்ரிக்காவில் உள்ள சென்சுரியன் மைதானத்தில் நடக்கிறது . இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் வலுவான அணிகளாக திகழ்கின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க அட்டகரார்களான இமாம்-உல்-அக் மற்றும் பக்கர் ஜமான் களம் இறங்கினர். இமாம் டக்-அவுட் ஆகி வெளியேறினர். பக்கர் ஜமான் 12 ரன்களிளும் அவ்ட் ஆகி வெளியேறினர். பின்னர் களம் இறங்கிய மாக்சுட் 19 ரன்களில் வெளியேறினர். பின்னர் களம் இறங்கிய ஆஷார் அலி 36 ரன்கள் மற்றம் ஷாதபிக் 7 ரன்களிளும் அவுட் ஆகினர். பின்னர் களம் இறங்கிய பாபர் ஆசாம் அதிகபச்சமாக 71 ரன்களை எடுத்தர். அதில் 15 பவுண்டரிகளும் அடங்கும். பின்னர் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். தென் ஆப்ரிக்கா பவுலர்களில் அதிகமாக இளம் வீரர் ஒலிவேர் 6 விக்கெட்களை எடுத்தார். ரபாடா 3 விக்கெட்களும், ஸ்டைன் ஒரு விக்கெட் எடுத்தானர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 181 ரன்கள் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா அணி தொடக்க அட்டகாரர்களான மார்க்ரம் மற்றும் எல்கர் களம் இறங்கினர் முதல் விக்கெட்டிற்கு 19 ரன்கள் எடுத்த இருந்த நிலையில் ஹசான் அலீ பவுலிங்கில் மார்க்ரம் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய ஆம்லா 8 ரன்களில் அமிர் பவுலீங்கில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் எல்கர் 22 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் களம் இறங்கிய அணியின் கேப்டன் டுப்-பிளாசிஸ் டக் -அவுட் ஆகி வெளியேறினார். எல்கர் மற்றும் டுப்-பிளாசிஸ் விக்கெட்களை இளம் வீரர் அப்ரிடி வீழ்தினார்.
பின்னர் இளம் வீரர் ஆன தெவுனிஸ்-டீ-ப்ரைன் மற்றும் பவுமா, இரண்டு வீரர்களும் இணைந்து 5வது விக்கெட்டிற்கு 69 ரன்கள் சேர்த்தது. டி-பிரைன் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமீர் பவுலிங்கில் அவுட் ஆகினார்.
பின்னர் களம் இறங்கிய ஸ்டைன் 13 ரன்களும், பவுமா 38 ரன்களிலும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்ரிக்கா அணி 127-5 ரன்கள் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்டார் ப்ளையர் ஆன வேகபந்து வீச்சாளர் ஸ்டைன் இந்த போட்டியில் முதல் விக்கெட் எடுத்தன் மூலம் தென் ஆப்பிக்காவின் அதிக விக்கெட்களை விழ்த்திய வீரர் என்ற சாதனையை பெற்றார்.
இந்த சாதனையின் முலம் முந்தைய சாதனையான பொல்லாகின் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு 421 விக்கெட்களை விழ்த்தியதே சாதனையாக இருந்தது. 422 விக்கெட்களை எடுத்து சாதனையை முறியடித்தார்.
இந்த போட்டியில் ஸ்டைனின் பவுலிங்கில் பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் 24 பந்துகளில் 10 பவுண்ட்ரிகளை விளாசினார்.
தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் ஆன ஒலிவேர் இன்றைய போட்டியில் தனது முதல் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினர் . இவர் தென் ஆப்பிரிக்காவின் இளம் வலது கை வேகப்பந்து வீச்சாளர் இவரின் முதல் போட்டியில் 6 விக்கெட்களை விழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.
இன்றைய போட்டியில் வேக பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்த போட்டியில் பாபர் அசாம் அடித்த 71 ரன்களே தென் ஆப்ரிக்காவில் அவரது அதிகபட்ச ரன்கள் ஆகும்.