2018-ன் சிறந்த பேட்ஸ்மேன்கள்: ஒருநாள் போட்டிகள் - ஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 

2018 ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா ஐந்து ஒருநாள் சதத்தை அடித்தார்
2018 ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா ஐந்து ஒருநாள் சதத்தை அடித்தார்

ஒருநாள் போட்டிகளில் 2018-ஆம் ஆண்டில் சில அற்புதமான நிகழ்வுகளும், வியக்கத் தக்க வகையில் சிறப்பான ஆட்டம், மெய் சிலிர்க்க வைக்கும் பேட்டிங் என இந்த ஆண்டு விறுவிறுப்பாக இருந்தது. பல்வேறு வீரர்கள் பேட்டிங்கில் அசத்தி வந்தாலும் ஒரு சில வீரர்களான ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஃபகார் ஸமான், ஷாய் ஹோப், மற்றும் பிரெண்டன் டெய்லர் ஆகியோர் இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடியுள்ளனர். இவர்கள் இந்த ஆண்டில் 800 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு இவர்களை மிஞ்சும் அளவிற்கு பேட்டிங்கில் குறிப்பிட்ட வீரர்கள் எதிர் அணியின் பந்து வீச்சாளர்களைத் திணறடித்துள்ளனர்.

# 3 ஜோ ரூட்

ஜோ ரூட் 2018 ஆம் ஆண்டில் நிறைய ரன்கள் அடித்திருக்கிறார்
ஜோ ரூட் 2018 ஆம் ஆண்டில் நிறைய ரன்கள் அடித்திருக்கிறார்

இங்கிலாந்து அணி இந்த ஆண்டு நடைபெற்ற தொடர்களில் ஸ்காட்லாந்து அணியுடன் மட்டுமே ஒரு போட்டி கொண்ட தொடரில் தோல்வியடைந்தது. 6 தொடர்களில் 5 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டின் ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ளனர். இவர்களில் ஜோ ரூட் இந்த ஆண்டு மட்டும் 24 இன்னிங்க்ஸ்களில் 3 சதம், 5 அரைசதம் உட்பட சராசரி 59.12, 946 ரன்கள், அதிகபட்சமாக 113* எடுத்து அசத்தியுள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 115 இன்னிங்க்ஸ்களில் 4946 ரன்கள், 51.52 சராசரி கொண்டு ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

# 2 ரோகித் சர்மா

ரோஹித் ஷர்மா, இங்கிலாந்து v இந்தியா - 3 வது ஒரு நாள்: ராயல் லண்டன் ஒரு நாள் தொடர்
ரோஹித் ஷர்மா, இங்கிலாந்து v இந்தியா - 3 வது ஒரு நாள்: ராயல் லண்டன் ஒரு நாள் தொடர்

இந்திய அணி இந்த ஆண்டு 4 தொடர்களில் 3 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்களில் ஒருவர் ரோகித் சர்மா. ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ஆவார். இதுவரை 193 ஒருநாள் போட்டிகளில் 7454 ரன்கள், 47.78 சராசரி, அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் 19 போட்டிகளில் 5 சதம், 3 அரை சதம் உட்பட 1030 ரன்கள், 73.57 சராசரி, 100.09 ஸ்ட்ரைக் ரேட், அதிகபட்சமாக 162 ரன்கள் எடுத்துக் கலக்கியுள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக சராசரி 50-க்கு மேல் வைத்துள்ளார். ஐ.சி.சி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

# 1 விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி, இங்கிலாந்து வி இந்தியா - 3 வது ஒரு நாள்: ராயல் லண்டன் ஒரு நாள் தொடர்
விராட் கோஹ்லி, இங்கிலாந்து வி இந்தியா - 3 வது ஒரு நாள்: ராயல் லண்டன் ஒரு நாள் தொடர்

கடந்த சில வருடங்களாக மிகச்சிறந்த வீரனாக வலம் வரும் விராட் கோஹ்லி ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டின் சிறந்த வீரர் ஆவார். அதிவேகமாக 10,000 ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து 205 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இந்த ஆண்டு 14 போட்டிகளில் 6 சதம், 3 அரை சதம் உட்பட 1202 ரன்கள், 133.56 சராசரி, 102.56 ஸ்ட்ரைக் ரேட், அதிகபட்சமாக 160* ரன்கள் எடுத்து மிரட்டியுள்ளார். இந்த ஆண்டில் ஒரு முறை கூட 15 ரன்களுக்கு குறைவாக எடுத்ததில்லை. 38 சதம் அடித்து அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஐ.சி.சி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 15 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் எடுத்த ஹஷிம் அம்லா மற்றும் தனது பழைய சாதனையை 11 இன்னிங்ஸ்களில் எடுத்து முறியடித்துள்ளார்.