இலங்கை கிரிக்கெட் வாரியம் 2019 உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணியை இன்று(ஏப்ரல் 18) அறிவித்துள்ளது. 2015ற்குப் பிறகு ஒருநாள் போட்டியே விளையாடத தீமுத் கரூனாரத்னே உலகக் கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஏப்ரல் 17) இலங்கை கிரிக்கெட் வாரியம் லாசித் மலிங்கா வசமிருந்த கேப்டன்ஷிப்பை கரூனாரத்னேவிடமிடம் அளித்தது. இடதுகை பேட்ஸ்மேன் தீமுத் கரூனாரத்னே சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
லஹீரு திரமன்னே, சுழற்பந்து ஆல்-ரவுண்டர் மிலிந்தா சிரிவர்தனே மற்றும் ஜீவன் மென்டிஸ், ஜெஃப்ரே வென்டேர்சே ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். மேற்கூறிய அனைத்து வீரர்களும் 2017ற்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிரோஷன் திக்வெல்லா, அகிலா தனஞ்செயா, தனுஷ்கா குணதிலகா, உபுள் தரங்கா போன்ற வீரர்கள் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. முன்னாள் கேப்டன் தினேஷ் சன்டிமாலையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை அணியில் கண்டுகொள்ளவில்லை.
இலங்கை அணுபவ பந்துவீச்சாளர் லாசித் மலிங்கா அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் இந்த உலகக்கோப்பையில் விளையாடினால் அதனை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கேப்டன் ஷீப்பிலிருந்து மலிங்கா நீக்கப்பட்டதால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என பத்திரிகைகளில் செய்திகள் கசிந்து வருகின்றன.
சில வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு மோசமான வருடமாக அமைந்து வருகிறது. குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு இலங்கை அணி 84 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. இதில் 23 வெற்றிகளையும், 55 தோல்விகளையும் சந்தித்துள்ளது. மே 2016லிருந்து இலங்கை அணி ஒரு ஒடிஐ தொடரை கூட கைப்பற்றியது இல்லை. கடைசியாக தென்னாப்பிரிக்காவில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 5-0 என வைட்-வாஷ் ஆனது இலங்கை அணி. கடந்த கால உலகக் கோப்பை வரலாற்றை பார்க்கும் போது இலங்கை கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடியுள்ளதால் இதே நம்பிக்கையுடன் 2019 உலகக் கோப்பையிலும் களமிறங்கும் என நம்பப்படுகிறது. இலங்கை அணி 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 2015 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு இலங்கை தகுதி பெற்றது.
14வது உலகக் கோப்பை மே 30 அன்று தொடங்க உள்ளது. இலங்கை அணி ஜுன் 1 அன்று நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது.
முழு அணி விவரம்:
தீமுத் கரூனாரத்னே (கேப்டன்), லாசில் மலிங்கா, ஆன்ஜீலோ மேதீவ்ஸ், தீசாரா பெரரா, குஷல் பெரரா, தனஞ்செயா தி செல்வா, குஷல் மென்டிஸ், இஷ்ரூ உடானா, மீலிந்தா சிரிவர்தனே, ஏவிஷ்கா ஃபெர்னான்டோ, ஜுவன் மென்டிஸ், லஹீரு திரமன்னே, ஜெஃப்ரே வென்டெர்சே, நூவான் பிரதீப், சுரங்கா லக்மல்.