ஆஸி.டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

நியூசிலாந்து எதிர் இலங்கை: 2ஆவது டெஸ்ட் போட்டி: மூன்றாம் நாள் ஆட்டம்
நியூசிலாந்து எதிர் இலங்கை: 2ஆவது டெஸ்ட் போட்டி: மூன்றாம் நாள் ஆட்டம்

நியூசிலாந்தில் தற்போது டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாட செல்லவுள்ளது இலங்கை அணி, குறித்த சுற்றுப் பயணம் முடிவடைந்தன, அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆஸி. வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.

ஜனவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கும் ஆஸி. அணியுடனான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய இலங்கை அணி வெளியிடப்பட்டுள்ளது.

மேதிவ்ஸ்க்கு ஓய்வு :

நியூசிலாந்து அணியுடன் முடிந்த, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் "வைட் வாஷ் " செய்யப்பட்ட இலங்கை அணி ஆஸி. டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்களான தனுஷ்க குணத்திலக்கா, எஞ்சலோ மேதிவ்ஸ் போன்ற வீரர்களுக்கு ஓய்வினை வழங்கியுள்ளது. எஞ்சலோ மேதிவ்ஸ் காயத்தில் இருப்பதும், தனுஷ்க குணத்திலக்கா நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சரியான பார்மை வெளிப்படுத்தாதுமே இதற்கு காரணங்களாகும்.

அதேநேரம் ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடி வீரரான குசல் ஜனித் பெரேரா நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் எஞ்சலோ மெதிவ்ஸ் இல்லாத நிலையினை ஆஸி. டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்காக பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சண்டிமல் கேப்டன்:

ஆஸி. டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சண்டிமல் தொடர்ந்தும் இருப்பதோடு, தொடக்க வீரரான திமுத் கருணாரத்ன துணை அணித்தலைவராக காணப்படுகின்றார்.

அதோடு லஹிரு திரிமான்னா, சதீரா சமரவிக்ரம போன்ற வீரர்களும் ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் :

துடுப்பாட்ட வீரர்கள் ஒருபுறமிருக்க ஆஸி. ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இடம் என்பதால் சுரங்கா லக்மால், நுவான் பிரதீப், லஹிரு குமார, துஷ்மந்த சமீரா ஆகிய வீரர்களுக்கும் கசுன் ராஜிதாவுடன் இணைந்து இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் தவிர ஆஸி. அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணியில் டில்ருவான் பெரேரா, லக்சான் சந்தகான் போன்ற சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.

இலங்கை அணி, ஆஸி. அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஜனவரி மாதம் 24ஆம் தேதி மோதுவதோடு குறித்த டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறுகின்றது.

இதன் பின்னர் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கன்பரா நகரில் இடம்பெறுகின்றது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை வீரர்கள் பயிற்சி ஆட்டமொன்றிலும் விளையாடுகின்றனர். மூன்று நாட்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டம் ஹோபார்ட் நகரில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகின்றது.

இதுவரையில் ஆஸி. மண்ணில் டெஸ்ட் போட்டிகள் எதிலும் வெற்றியினை பெறாத இலங்கை அணி, ஆஸி. அணியின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் போட்டித்தடைக்கு ஆளாகியிருப்பதால் தமது முதல் டெஸ்ட் வெற்றியினை பெறும் என நம்பப்படுகின்றது.

இலங்கை டெஸ்ட் அணி

1. தினேஷ் சந்திமால் (தலைவர்)

2. திமுத் கருணாரத்ன (துணை தலைவர்)

3. குசால் மெண்டிஸ்

4. டனன்ஞயா டி சில்வா

5. ரோசேன் சில்வா

6. நிரோசன் டிக்வெல்லா

7. குசால் பெரேரா

8. லஹிரு திரிமான்னா

9. சதீரா சமரவிக்ரம

10. டில்ருவான் பெரேரா

11. லக்சான் சந்தகான்

12. சுரங்கா லக்மால்

13. கசுன் ராஜிதா

14. லஹிரு குமார

15. நுவான் பிரதீப்

16. துஷ்மந்த சமீரா

Edited by Fambeat Tamil