இலங்கை அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறுது. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 21 ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதை இலங்கை அணி கொண்டாடி தீர்த்தது. அதே சந்தோசத்தில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கும் இலங்கை அணி தங்களின் 17 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் ஒரு நாள் போட்டிக்கான அணியை பின்வருமாறு பார்ப்போம்.
இலங்கை அணியில் கடந்த சில தொடர்களாக தினேஷ் சண்டிமல் கேப்டன் பொறுப்பில் இருந்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் விலக்கிய நிலையில் தென் ஆப்ரிக்கா தொடர் முழுவதும் தினேஷ் சண்டிமல் அணியில் கழட்டி விடப்பட்டுள்ளார். இலங்கை அணி கடந்த மாதம் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்த தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா செயல்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலும் மலிங்கா தலைமையில் களம் இறங்க உள்ளது.
இந்த தொடரில் இடது கை பந்து விச்சாளர் இசுரு உடனா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். இவர் ஏழு வருடங்களுக்கு பிறகு இலங்கை ஒரு நாள் போட்டிகளில் அணியில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு வயது 31 ஆகும் நிலையில் இவர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு இரண்டு ஒரு நாள் போட்டிகள் மட்டும் விளையாடி உள்ளார்.

அதே போன்று அகிலா தனஞ்ஜெயா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் பந்து வீச்சில் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போழுது சென்னையில் நடந்த சோதனைக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த அனுஷ்கா குனதிலகா, சமிரா, சனாகா, பிரசன்னா, குனரத்னே ஆகியோர் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் மூத்த வீரர் ஆஞ்சிலோ மேத்திவ்ஸ் அணியில் இடம் பெறவில்லை. அதே போன்று பிரதிப் மற்றும் லகிரு குமாரா இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
இலங்கை அணியில் முதல் தர கிரிக்கெட்டில் சமிபத்தில் இரட்டை சதம் அடித்த பிரியாமால் பெரேரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போன்று முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்து வெளியேறிய சாமிகா கருனரத்னே போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் அசிதா பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்படுள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இலங்கை அணி : (கேப்டன்)மலிங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, உபுல் தரங்கா, நிரோசன் டிக்குவெல்லா(துணை கேப்டன்), குசால் பெரேரா, குசால் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, ஆஞ்சிலோ பெரேரா, ஒஷாடா பெர்னாண்டோ, கமிண்டு மென்டிஸ், திசெரா பெரேரா, பிரியமால் பெரேரா, உடனா, விஷ்வா பெர்னாண்டோ, கசூன் ராஜிதா, லக்க்ஷான் சன்டகன்.