U19 உலகக்கோப்பை தொடரானது சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஒரு முதற்படியாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்திறனை அவர்களது இளம் வயதில் கண்டறிய மிகவும் உறுதுனையாக இத்தொடர் உள்ளது. தங்களுக்கு U19 உலகக்கோப்பையில் அளிக்கப்படும் வாய்ப்பை வீரர்கள் நன்றாக பயன்படுத்தி கொண்டு நிருபிக்கின்றனர்.
இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தக் கூடிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இடம்பெறுகின்றனர். விராட் கோலி மற்றும் கானே வில்லியம்சன் போன்ற வீரர்கள் U19 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தனர். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக திகழ்ந்து 2019 உலகக்கோப்பை தொடரில் தாங்கள் விளையாடி வரும் அணியின் கேப்டன்களாக உள்ளனர்.
U19 வீரர்களும் உலகக்கோப்பையில் பங்குபெற வேண்டும் நோக்கத்துடன் விளையாடுகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. இவர்கள் U19 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் பங்கேற்கும் வாய்ப்பு பெறுகின்றனர். ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் U19 உலகக்கோப்பையில் ஒரே சமயத்தில் ஒரே அணியில் விளையாடிய வீரர்கள் 2019 உலகக்கோப்பையிலும் இனைந்து விளையாடி வருகின்றனர்.
நாம் இங்கு ஒரே சமயத்தில் U19 உலகக்கோப்பையில் விளையாடி 2019 உலகக்கோப்பையிலும் ஒரே சமயத்தில் இனைந்து விளையாடி வரும் நட்சத்திர வீரர்களை பற்றி காண்போம்.
#5 டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா
2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது இளம் வயதிலும் இனைந்து ஒன்றாக விளையாடியுள்ளனர். டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் ஆஸ்திரேலிய U19 அணியில் இடம்பெற்று 2006 U19 உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளனர். அப்போது அந்த அணியின் கேப்டனாக மொய்ஸஸ் ஹன்ரிக்யூஸ் செயல்பட்டார்.
ஆஸ்திரேலிய U19 அணி அந்த தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக பாகிஸ்தானிடம் தோல்வியுற்று வெளியேறியது. தற்போது வரை இம்மூன்று வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசத்தி வருகின்றனர்.
டேவிட் வார்னர் தனது ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்தே அதிரடியாகவும், உஸ்மான் கவாஜா ஆரம்பத்தில் தடுமாறியும் விளையாடி வந்தனர். ஆரோன் ஃபின்ச் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தை உறுதி படுத்தி கொண்டார்.
தற்போது ஆரோன் ஃபின்ச் 2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
#4 ஷகிப் அல் ஹாசன், தமீம் இக்பால், முஷ்டபிசூர் ரஹீம்
ஒரு காலத்தில் வங்கதேச அணி உலக கிரிக்கெட்டில் ஒரு உறுப்பு அணியாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதற்கு முக்கிய முழு காரணமாக இருந்தவர்கள் ஷகிப் அல் ஹாசன், முஷ்டபிசுர் ரஹீம் மற்றும் தமீம் இக்பால்.
இவர்கள் மூவரும் இனைந்து கடந்த 13 வருடங்களில் வங்கதேச அணிக்காக 1000 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பர். அந்த அணியின் வெற்றிக்கு பெரும் முதுகெலும்பாக இவர்கள் மூவரும் இருந்துள்ளனர். தமீம் இக்பால், முஷ்டபிசுர் ரஹீம், ஷகிப் அல் ஹாசன் ஆகியோர் 2006 U19 உலகக்கோப்பையிலும் இனைந்து விளையாடியது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முஷ்டபிசுர் ரஹீம் தலைமையிலான வங்கதேச U19 அணி, மொய்ன் அலி தலைமையிலான இங்கிலாந்து U19 அணியிடம் காலிறுதியில் தோல்வியை தழுவியது. ஷகிப் அல் ஹாசன், முஷ்டபிசுர் ரஹீம், தமீம் இக்பால் ஆகியோர் 2007 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்று இந்திய அணியை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் இவர்கள் மூவரும் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. வங்கதேச கிரிக்கெட் அணியின் தூண்களாக இவர்கள் மூவரும் விளங்குகின்றனர்.