கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன்: மிட்செல் ஸ்டார்க்

கடந்த ஐ.பி.ல். ஏலத்தில் 1.8 மில்லியன் டாலருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருந்தார்
கடந்த ஐ.பி.ல். ஏலத்தில் 1.8 மில்லியன் டாலருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருந்தார்

உலகின் தலைசிறந்த பௌலர்களில் ஒருவராகக் கருதபடுபவர் மிட்செல் ஸ்டார்க். அதிவேகமாகப் பந்து வீசக்கூடிய திறமை படைத்தவர். யார்கர் பந்துகள்மூலம் பேட்ஸ்மேன்களை திணறச் செய்பவர். அப்படிப்பட்ட ஒரு பௌலர் ஐ.பி.ல். போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க காயம் ஒரு தடையாக இருந்து வருகிறது.

28 வயதான ஸ்டார்க் கடந்த ஐ.பி.ல். ஏலத்தில் 9.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருந்தார். ஆனால் ஒரு காலில் ஏற்பட்ட காயத்தால் போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தத் திங்களன்று ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் (உரை செய்தி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள் அவருக்கு அனுப்பியதாகவும், அதில் அவர் தனது ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் ஸ்டார்க் வெளிபடுத்தியதாக cricket.com.au. இணையதளம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய போனஸ் என ஸ்டார்க் கூறியுள்ளார். மற்ற ஐ.பி.ல். அணிகளில் ஏதாவது ஒரு அணி தன்னை ஏலத்தில் எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"தற்போதுள்ள நிலையில் என்னைப் பொறுத்தவரையில், நான் ஆஸ்திரேலியாவிற்கு அதிகமான டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஐ.பி.ல். விளையாடுவது ஒரு அழகிய போனஸ். ஆனால் நான் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.ல்.லை மிஸ் செய்தால் அது என்னுடைய ந நன்மையே" என ஸ்டார்க் கூறியுள்ளார்.

மேலும், "எங்களுக்கு, இந்த நேரத்தில் ஒப்பந்தங்களைப் பற்றிப் பெரிய கவலைகள் இல்லை. கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்படுவது பற்றித் தான் எங்கள் எண்ணங்கள் உள்ளன. சிறப்பான செயல்பாடு ஒப்பந்தத்த நேரத்தில் எஞ்சியிருப்பதை கவனித்துக் கொள்ளும். ஒப்பந்தம் எப்பொழுதும் இருக்கும். அதனால் அதைப் பற்றிக் கவலைகள் இல்லை." என ஸ்டார்க் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை 27 ஐ.பி.ல். போட்டிகளில் பங்கேற்றுள்ள ஸ்டார்க் 34 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரின் எக்னாமி ரேட் 7.17 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.ல். போட்டிகளில் ஸ்டார்க்கின் எக்னாமி ரேட் 7.17
ஐ.பி.ல். போட்டிகளில் ஸ்டார்க்கின் எக்னாமி ரேட் 7.17

அடுத்த ஆண்டு ஐ.பி.ல். மே மாத தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது முடிந்தவுடன் ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்துக்கு செல்ல வேண்டியுள்ளது. ஜூன் 1 ம் தேதி முதல் ஆட்டம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஆஸஸ் டெஸ்ட் போட்டி எட்காஸ்டனில் தொடங்குகிறது. ஐந்து டெஸ்ட் தொடர் செப்டம்பர் 16 அன்று முடிவடைகிறது.

“எந்த ஒரு வெளிநாட்டு டி20 போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லையென வீரர்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே நீண்ட கால ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்பட முடியும். இதைப் பற்றிப் பேசுவது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறன். வீரர்கள் வெளிநாட்டு டி20 போட்டிகளில் பங்கேற்றால் சிலவற்றை இழக்க நேரிடும். அவர்கள் வெளிநாட்டு டி20 போட்டிகளிலும் பங்கேற்று விட்டு, ஆஸ்திரேலியா அணியிலும் அனைத்தையும் பெற முடியாது.” என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங் கூறியுள்ளார்.

சென்ற வாரம் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் டி20 அணியிலிருந்து மிட்செல் ஸ்டார்க், மூத்த ஸ்பின்னர் நாதன் லியோன் மற்றும் ஆல்-ரவுண்டர் மிட்ச் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களுக்குத் தயார்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.