உலகக் கோப்பை 2019 : இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணியின் புள்ளிவிவரங்கள்

Icc cricket world - india vs south africa stats
Icc cricket world - india vs south africa stats

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் தனது முதல் போட்டியை விளையாடி முடித்த நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 144 பந்துகளில் 122 ரன்களை அடித்தார்.தென்னாப்பிரிக்கா அணி இந்த உலகக் போப்பையில் தொடர்ந்து மூன்று முறை தோல்வியை பெற்றது.

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணி இதுவரை 84 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளது. அதில் இந்திய அணி 34 போட்டிகளிலும் , தென்னாப்பிரிக்கா அணி 46 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். மூன்று போட்டிகள் டிரா ஆனது.மேலும் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நான்கு முறை மோதியது.அதில் இந்திய அணி 1 போட்டியிலும் , தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றனர்.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் புள்ளிவிவரங்கள் :

#1.பேட்டிங்

438/4 - 2015 ல் தென்னாப்பிரிக்கா இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.

91- 2006 ல் இந்தியா இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் அனைத்து விக்கெட்களை இழந்து அடித்து குறைவான ரன்களாகும்.

2001- சச்சின் டெண்டுல்கர் அடித்த இந்த ரன்கள் இரண்டு அணிகள் இடையிலான போட்டிகளில் ஒருவர் மட்டும் அடித்த அதிக ரன்களாகும்.

200 - 2010 ல் சச்சின் இரட்டை சதம் அடித்தள்ளார்.இந்த அணிகளில் அடித்த முதல் இரட்டை சதமாகும்.

49 - இந்த இரு அணிகள் இடையிலான போட்டியில் அடித்த சதத்தின் கணக்காகும்.

6 - ஏபி டி வில்லியர்ஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடித்த சதத்தின் எண்ணிக்கை.

14 - ராகுல் டிராவிட் அடித்த அரைசதத்தின் எண்ணிக்கை.இதுவே இரு அணிகளுக்கு நடந்த போட்டிியில் முதலில் உள்ளது.

41 - ஏபி டி வில்லியர்ஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடித்த மொத்த சிக்ஸர்கள் ஆகும்.இதுவே தனி நபர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கை.

#2.பவுலிங்

48 - இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஷான் பொல்லாக் எடுத்த விக்கெட்கள் ஆகும்.

7 - இந்த இரு அணிகளுக்கும் இடையில் போட்டிகளில் 7 ஐந்து விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.

#3.விக்கெட் கீப்பிங்

42 - மார்க் பவுச்சர் தனது விக்கெட் கீப்பிங் மூலம் எடுத்த விக்கெட்கள். இரு அணிகளில் இதுவே அதிகபட்ச விக்கெட் கீப்பர் மூலம் எடுக்கப்பட்ட விக்கெட்டின் எண்ணிக்கை.இவர் 2010 ல் மட்டும் 5 விக்கெட்களை எடுத்தாள்ளார்.

#4..பீல்டிங்

19 - விராட் கோலி மற்றும் கிரேம் ஸ்மித் பிடித்த கேட்சுகளின் எண்ணிக்கை.இதுவே நனிநபர் பிடித்த அதிகபட்ச கேட்சுகளாகும்.

4 - 2006ல் ஸ்மித் பிடித்த மொத்த கேட்சுகள்.இதுவே அந்த ஆண்டு இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிடித்த அதிக கேட்சுகள்.

Quick Links