தோனி மற்றும் ஜடேஜாவின் உடல்நலம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள ஸ்டீபன் பிளம்மிங்

Stephen Fleming on Dhoni and Jadeja's health
Stephen Fleming on Dhoni and Jadeja's health

நடந்தது என்ன?

எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் உடல்நலம் பற்றி முக்கியமான தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். இருவரும் நேற்று(ஏப்ரல் 26) சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை.

உங்களுக்கு தெரியுமா...

மும்பை இந்தியன்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் ஏப்ரல் 26 அன்று எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் XI-ல் மூன்று மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. முரளி விஜய், துருவ் சோரே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் ஃபேப் டு பிளஸ்ஸி, மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு மாற்றாக சென்னை அணியில் களமிறங்கினர்.

பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. ஹீட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்பெறும் ரோகித் சர்மா அரைசதம் (48 பந்துகளில் 67 ரன்கள்) விளாசினார். ஸ்லோ பிட்ச் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 156 என்ற இலக்கை சரியாக சேஸிங் செய்ய தவறியது. 17.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 2019 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சொந்த மண்ணில் முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கதைக்கரு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஸ்டார் பிளேயர்கள் அணியில் இல்லாதபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்திறனை கண்டு அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிபன் பிளமிங் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளார். இதற்கிடையில் ஏப்ரல் 27 அன்று மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது உடல்நலம் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார். "தோனி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சீசனில் எதிரிகளுக்கு இவர்கள் இருவரும் கடும் நெருக்கடியை அளித்தனர்.

இதற்கு முன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்நிய மண்ணில் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டிபன் பிளமிங் மேலும் கூறியதாவது:

"சென்னை அணிக்கு கிடைத்துள்ள இந்த 4 நாட்கள் இடைவேளையை சரியாக பயன்படுத்தி முன்னேறும். இன்று வீரர்கள் முழு ஓய்வை எடுப்பார்கள். நான்கு நாட்கள் இடைவேளை இருப்பதால் இந்த ஒருநாள் ஓய்வு பாதிக்காது. மும்பை இந்தியன்ஸ் அணியும் தனக்கு கிடைத்த 5 நாட்கள் இடைவேளையை சரியாக பயன்படுத்திக் கொண்டு நேற்று சிறப்பாக விளையாடியது. நாங்களும் இந்த நுணுக்கங்களை கையாண்டு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம்."

அடுத்தது என்ன?

சென்னை அணிக்கு 4 நாட்கள் இடைவேளை இருப்பதால் அடுத்த போட்டியில் மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் XI-ற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மே 1 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் மோத உள்ளது. மொகாலி-யில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil