பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து ரசிகர்களினால் கடும் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்ட ஸ்டிவன் ஸ்மித் வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான செய்தி

Steve Smith
Steve Smith

நடந்தது என்ன?

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது சவுத்தாம்டன் நகர கிரிக்கெட் ரசிகர்களால் கடும் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்டார். அதன்பின் ஸ்டிவன் ஸ்மித் கூறியதாவது, என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் கண்டு கொள்ள மாட்டேன். என்னுடைய சீரான பேட்டிங்கை ஆஸ்திரேலிய அணிக்காக வெளிபடுத்துவேன்.

உங்களுக்கு தெரியுமா...

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட மூன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுள் ஸ்டிவன் ஸ்மித்-தும் ஒருவர். உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரது கிரிக்கெட் தடை முடிவுக்கு வந்தது. வலதுகை பேட்ஸ்மேனான ஸ்டிவன் ஸ்மித் ஒரு வருடத்திற்கு முன், தான் விட்ட சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிகொணர்ந்து வருகிறார்.

கதைக்கரு

ஆஸ்திரேலிய அணி சவுத்தாம்டனில் நடந்த முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தனது பரம எதிரி இங்கிலாந்தை எதிர் கொண்டது. ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஏளனப் படுத்தினர். அத்துடன் "மோசடிகாரர், மோசடிகாரர்" என்று அதிக ஓசையுடன் கத்தினர். இருப்பினும் ஸ்டிவன் ஸ்மித் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் பேட்டிங் மூலம் தன்னை ஏளனப்படுத்தியவர்களுக்கு பதில் அளித்தார். ஆட்டம் முடிந்த பிறகு சவுத்தாம்டன் நகரின் கிரிக்கெட் ரசிகர்கள் தன்னை ஏளனப்படுத்தியதைப் பற்றி ஸ்டிவன் ஸ்மித் கூறியதாவது,

"நான் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது சில வார்த்தைகள் என் காதில் விழுந்தது, ஆனால் நான் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. நான் தலைகுனிந்து, என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஆடுகளத்தை நோக்கி நேராக சென்றேன். என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான ரன்களை ஆஸ்திரேலிய அணிக்காக அடிக்க முடிந்தது. அத்துடன் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக மிடில் ஆர்டரில் என்னால் முடிந்த ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்காக கொடுத்தேன் என நம்புகிறேன்.

ஸ்டிவன் ஸ்மித் மேலும் கூறியதாவது, சவுத்தாம்டன் நகர மக்களின் இந்த வெளிபாட்டினை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மைதானத்தின் முதல் தளத்தில் என்னுடைய ஆட்டத்தை கண்டு ஆஸ்திரேலிய சக வீரர்கள் மிகவும் உற்சாகத்தை அளித்தனர் எனக் கூறினார்.

"என்னை ஏளனப் படுத்தியதைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தின் முதல் தளத்திலிருந்து எனக்கு அதிக உற்சாகத்தை ஊட்டினர். இதவே எனக்கு முக்கியம். என்னை ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரில் களமிறக்கியதற்கு மிக்க நன்றியை ஆஸ்திரேலிய நிர்வாகத்திற்கு தெரிவித்து கொள்கிறேன். உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை பெருமையடையச் செய்ய என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்."

அடுத்தது என்ன?

ஸ்டிவன் ஸ்மித் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இங்கிலாந்திற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து ரசிகர்களின் இந்த ஏளனம் வருங்காலத்திலும் அவரது பேட்டிங்கை மேன்மேலும் மேம்படுத்த மிக்க உதவியாக இருக்கும்.

Quick Links

App download animated image Get the free App now