ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்னும் சில தினங்களில்இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதற்கான வீரர்களை அறிவித்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய அணி கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றது. இதில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. டி20 தொடரை சமன் செய்தது. அதற்கு பின் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது..
ஆஸ்திரேலிய அணியில் முன்னனி பந்து வீச்சாளரான மிட்சில் ஸ்டார்க் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை என அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் குறைவான போட்டிகளிலே அவர் களமிறக்கப்படுகிறார். அதுமட்டுமின்றி இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றவர் ஸ்டார்க். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு காரணம் அவரை உலகக்கோப்பை தொடருக்காக தயார் செய்கிறது என ஆஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்காலம் இன்னும் முடியாததால் அவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆரோன் பின்ச் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பேட் கம்மிங்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாதன் குல்டர் நைல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக இங்கிலாந்து தொடரில் பங்கேற்க கேன் ரிச்சர்ட்சன் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டரான அஸ்டன் டர்னர் இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே 3 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை :
பிப்ரவரி 24 : முதல் டி20 - விசாகப்பட்டினம்
பிப்ரவரி 27 : இரண்டாவது டி20 – பெங்களூர்
மார்ச் 1 : முதல் ஒருநாள் போட்டி – ஹைதராபாத்
மார்ச் 5 : இரண்டாவது ஒருநாள் போட்டி – நாக்பூர்
மார்ச் 8 : மூன்றாவது ஒருநாள் போட்டி – ராஞ்சி
மார்ச் 10 : நான்காவது ஒருநாள் போட்டி – மொகாலி
மார்ச் 13 : கடைசி ஒருநாள் போட்டி – டெல்லி
வீரர்கள் விவரம் :
ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு தொடருக்கும் ஒரே அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.
ஆரோன் பின்ச் ( கேப்டன் ), பேட் கம்மிங்ஸ், அலெக்ஸ் கேரி ( விக்கெட் கீப்பர் ), ஜோசன் பென்ட்ராப், நாதன் குல்டர் நைல், பீட்டர் ஹேன்ஸ்கேப், உஸ்மான் காவாஜா, நாதன் லயன், ஷேன் மார்ஷ், மேகஸ்வேல், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டோனைஸ், அஸ்டன் டர்னர், ஆடம் ஜாம்பா, டி ஷார்ட்.
கடந்த தொடரில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா இந்த தொடரில் இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.