இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மற்றும் ஐந்து ஓரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது . இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது . நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய திவீல் உள்ள பார்பாடஸில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் டெஸ்ட் போட்டிகளின் வேகப்பந்து வீச்சாளரும் ஆன ஸ்டுவர்ட் ப்ராட் அணியில் இடம்பெறவில்லை . ஸ்டுவர்ட் ப்ராட் இடம்பெறாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது . ஏன்னெனில் இங்கிலாந்து அணியில் மூத்த அனுபவ வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் மற்றும் ஆன்டர்சன், ஸ்டுவர்ட் ப்ராட் அணியின் முக்கிமான வேகபந்து வீச்சாளர். இவர் அணியில் இடம் பெறாதது ஒரு மாற்றமாக கூறப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி கூறியதாவது : "இங்கிலாந்து அணி வீரர்கள் போட்டிக்கு முதல் நாள் தங்கியிருந்த ஹோட்டலில் ஸ்டுவர்ட் ப்ராட் தங்கிய அறையில் நிறைய மூட்டைப்பூச்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அப்பூச்சிகள் இரவில் ஸ்டுவர்ட் ப்ராடை கடித்ததாகவும் அதனால் அறையை விட்டு வெளியே வந்த ஸ்டுவர்ட் ப்ராட் வராண்டாவில் இரவு தூங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் ஸ்டுவர்ட் ப்ராட் சரியாக தூங்கவில்லை என கூறப்படுகிறது . இதனால் தான் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டுவர்ட் ப்ராட் பங்கேற்க முடியாமல் போனது" என கூறப்படுகிறது . இங்கிலாந்து அணி நிர்வாகம் இதனை கூறியுள்ளது.
முன்னதாக மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்ற ஸ்டுவர்ட் ப்ராட் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . இவர் பயிற்சி போட்டியில் தனது பவுலிங்கில் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நிலையில் இப்பொழுது மூட்டைபூச்சி கடித்ததால் ஒரு போட்டியை இழந்துள்ளார் ஸ்டுவர்ட் ப்ராட் . இவர் இங்கிலாந்து அணியில் நீண்ட காலமாக சிறப்பான வீரராக செயல்பட்டு வருகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை இங்கிலாந்து அணிக்காக விளையாடி செய்துள்ளார்.
ஸ்டுவர்ட் ப்ராட் டெஸ்ட் போட்டியில் இதுவரை 433 விக்கெட்களை வீழ்த்தியுள்ளர் . இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவர் இங்கிலாந்து அணியில் பத்து ஆண்டுகள் மேலாக விளையாடி வருகிறர் . இவர் பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஸடுவர்ட் ப்ராட் இதுவரை டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்களை அடித்துள்ளார். இவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது . மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அடுத்த போட்டி வரும் 31 ம் தேதி மேற்கு இந்திய தீவில் உள்ள அன்டிகு நடைபெறுகிறது.