12வது ஐபிஎல் தொடர் தொடங்க 1 மாதங்களுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வள்ளுநர்கள் தற்போதைய வீரர்களின் ஆட்டத்திறனை கணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகக் கோப்பை டிவிட்டர் பக்கத்தில் யார் 2019 உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவிப்பார்கள் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஸ்டுவர்ட் பிராட் தனது சக வீரர் மற்றும் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்-டின் பெயரை அந்த டிவிட் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோ ரூட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவராக திகழ்கிறார். நிதான ஆட்டக்காரர் ஜோ ரூட் தனி ஒருவராக நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர். இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பேட்டிங்கில் பெரும் பங்கை அளித்து வருபவர் ஜோ ரூட்.
இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் ஜோ ரூட் ஒரு முன்னணி வீரராக திகழ்கிறார். இங்கிலாந்து அணியில் சில அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தாலும் ஜோ ரூட் தான் அந்த அணியின் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
ஜோ ரூட் அதிக கிரிக்கெட் அனுபவங்களை தன் வசம் வைத்துள்ளார். குறிப்பாக தனது சொந்த மண்ணில் எவ்வாறு ஆட்டத்தை கையாள வேண்டும் என்ற முழு வித்தையை நன்கு அறிந்து வைத்திருப்பவர் ஜோ ரூட். எனவே வலது கை பேட்ஸ்மேன் ஜோ ரூட் 2019 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக ஜோ ரூட் இதுவரை 126 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 50.47 சராசரி மற்றும் 86.73 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 5097 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒடிஐ பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் 782 மதிப்பிட்டு புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து அணி ஓடிஐ தரவரிசையில் முதல் இடத்தை வகிக்கிறது. எதிர்வரும் 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து ஒரு மிகப்பெரிய போட்டியாளராக உள்ளது. உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் மே 30 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக கெனிங்டன் ஓவல் மைதானத்தில் மோத உள்ளது.
இங்கிலாந்து அணி உலகக் கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அயர்லாந்திற்கு எதிராக 1 ஒருநாள் போட்டியிலும் மற்றும் பாகிஸ்தானிற்கு எதிராக 1 டி20 & 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அயர்லாந்திற்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியில் மூன்று அறிமுக வீரர்கள் (ஜோஃப்ரா ஆர்சர், பென் ஃபாக்ஸ், டேவிட் மாலன்) களமிறங்கினர். இங்கிலாந்து அணி அந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானிற்கு எதிரான ஒரெயொரு டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மே 8 அன்று தொடங்க உள்ளது.