சுப்மன் கில் தற்போது புதிதாக கிரிக்கெட் உலகம் கண்டெடுத்த சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 19 வயதான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் வருங்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சாதனைகளை படைக்க உள்ளார். கிடைக்கும் வாய்ப்பினை சீராக பயன்படுத்தி சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை கொண்டு விளங்குகிறார்.
கடந்த ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பேட்டிங்கில் ஒரு தனித்திறனுடன் செயல்பட்டார் சுப்மன் கில். உலகக்கோப்பை தொடரில் இவர் பரம எதிரியான பாகிஸ்தான்-வுடன் அரையிறுதியில் சதமடித்தார். அத்துடன் முக்கியமான சில போட்டிகளில் அரைசதம் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர் U-19 உலகக் கோப்பையில் மொத்தமாக 128 சராசரியுடன் 372 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்திறன் மூலம் இந்திய சீனியர் அணிக்குள் நுழைவதற்கு ஒரு வழிவகையாக சுப்மன் கில்-ற்கு அமையும். மேலும் U-19 உலகக் கோப்பை தொடரில் தொடர் மற்றும் ஆட்டநாயகன் விருதினை வென்று அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் சுபமன் கில் வெளிபடுத்திய ஆட்டத்திறனை வைத்து அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இவரை 2018 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் இவரை கொல்கத்தா அணியில் மிடில் ஆர்டரிலும் இறக்கப்பட்டார். இருப்பினும் சற்றும் மனம் தளராமல் 11 போட்டிகளில் விளையாடி 33.83 சராசரியுடனும் , 146.06 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 203 ரன்களை குவித்தார்.
19 வயது இளம் வீரர் சுப்மன் கில் 2018/19 ரஞ்சிக்கோப்பையில் பஞ்சாப் அணி சார்பாக களமிறங்கினார். மொத்தமாக 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸில் விளையாடி 165.80 சராசரியுடன் 629 ரன்களை குவித்துள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக முதல் தர கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்களுடனும் 125.80 சராசரியுடனும் 990 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் 100 பந்துகளில் 77.80 ஸ்ட்ரைக் ரேட்-டை சரியாக நிர்வகித்து வருகிறார்.
சுப்மன் கில் தற்போது நடந்து வரும் ரஞ்சிக்கோப்பையில் தனது அதிக ரன்களான 268 ரன்களை தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் அடித்தார். உள்ளுர் கிரிக்கெட்டில் கலக்கிய மயான்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா-விற்கு சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது போல சுப்மன் கில்-ற்கும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுலின் பதிலாக இவரை களமிறக்க பிசிசிஐ பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில்-லின் ஆட்டத் திறன் மற்றும் பேட்டிங் நுட்பத்திறன் கிட்டத்தட்ட விராட் கோலி-யை போலவே உள்ளதால் இவரை. அடுத்த விராட் கோலி என்றும் கூறலாம். இவருடைய ஷார்ட் ஆர்ம் ஜேப் ஷாட் இதற்கு ஒரு சான்றாக கூறலாம்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் நிச்சயமாக இந்திய தேர்வாளர்களின் கண்களில் பட்டு இந்திய அணியில் இடம்பிடிப்பார். இவர் லிஸ்ட்- ஏ கிரிக்கெட்டில் 36 போட்டிகளில் பங்கேற்று 48 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்களுடன் 1529 ரன்களை குவித்துள்ளார்.
சுப்மன் கில் சமிபத்தில் முடிந்த டியோதர் டிராபில் சேம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா- சி அணியில் இடம்பெற்றிருந்தார். இத்தொடரில் இந்தியா- ஏ -ற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசி தனது அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார். தற்போது இந்திய ஓடிஐ அணியில் நிலவி வரும் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு சுப்மன் கில் ஒரு சிறந்த தீர்வாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த பேட்டிங் வரிசையில் இறங்கினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்டவராக விளங்குகிறார் கில்.
இவர் 2018ல் விளையாடிய அனைத்து அணிக்கு எதிராகவும் சிரான ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார். இவரது அதிரடி பேட்டிங் ஸ்டைலினால் கூடிய விரைவில் சர்வதேச இந்திய அணியில் சுப்மன் கில் -லை காணலாம்.
எழுத்து : நிதீன் கார்
மொழியாக்கம் : சதீஸ்குமார்