இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தய அணியின் முக்கிய வீரர்களில் முதன்மையானவர். இவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி. இந்திய அணியில் மட்டும் அல்ல உலக அளவில் சிறந்த பினிஷர் என்ற பெருமைக்கு சொந்தகாரர். இவர் கேப்டன்ஷியில் இந்திய அணி மூன்று விதமான உலக கோப்பைகளையும் பெற்று தந்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி . இவர் 2004 ஆண்டு இந்திய அணியில் முதலில் இடம்பெற்றார் . இவர் 14 ஆண்டுகளாக இந்திய அணியின் நம்பிகை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார். அதன். பின்னர் ஒரு நாள் போட்டி மற்றும் டி- 20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 2016 ஆம் ஆண்டு தனது இந்திய அணியின் அனைத்து விதமான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். அதன் பின்னர் கோலியின் கேப்டன்ஷியில் விளையாடி வருகிறார். இவர் சிறந்த விக்கேட் கிப்பராகவும் திகழ்ந்து வருகிறார்.
மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பான கேப்டன்ஷியும் தனது பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . அது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு ஐபிஏல் கோப்பையையும் சென்னை அணிகாக பெற்று தந்தார். அதன் பின்னர் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த தகுந்த வாய்ப்பு இல்லாததால் சற்று குறைவான ரன்களையையே அடித்தார் . பின்னர் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் தனது முழு பங்களிப்பை கொடுக்க முடியாமல் தனது விக்கேட் கிப்பிங் பணியில் மட்டும் சிறந்து விளங்கினார். அதன் பின்னர் நடைபெற்ற வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு ஏதிரான ஒரு நாள் தொடரில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிபடுத்த முடியாமல் தடுமாறினார் தோனி . இதன் விளைவாக இதுவரை அனைத்து டி -20 தொடர்களிலும் இடம்பெறும் தோனியின் பெயர் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு ஏதிரான டி-20 தொடரிலும் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு ஏதிரான டி-20 தொடரிலும் இடம்பெறவில்லை .
இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியின் போது மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை பற்றி முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியவதாவது “ தோனியை நெருக்கடி இல்லாமல் , தனியாக, சுதந்திரமாக விளையாடவிடுங்கள், சிறப்பாக செயல்படுவார். தோனிக்கு இளமை திரும்பவில்லை, இளமையாக இருந்தபோது இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தால் ஏற்கலாம். இப்போது நாம் பொறுமை காக்க வேண்டும் . தோனியின் நிலையற்ற நிலையை பார்த்து குறை சொல்லாதிர்கள். மதிப்புமிக்க வீரர் தோனி “ என்றார்.
இந்த நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியில் தோனி தொடர்ந்து மூன்று அரை சதத்தினை விளாசினார். அது மட்டுமில்லாமல் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்காக ஆட்டத்தை பினிஷிங் செய்து தன்னை மிண்டும் சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்தார் மகேந்திர சிங் தோனி . இதன் முலம் தன்னை விமர்சித்த முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்தார் தோனி. இதன் முலம் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குறிபிட்டது நடந்துளளது.