சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் விறுவிறுப்பான தொடர் ஒன்று இருக்கிறது என்றால் அது உலக கோப்பை தொடர் தான். காரணம் அந்த உலக கோப்பை தொடரில் தான் அனைத்து நாடுகளும் பங்கேற்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த உலகக் கோப்பை தொடரானது கடைசியாக கடந்த 2015ஆம் வருடம் நடத்தப்பட்டது. தற்போது 4 ஆண்டுகள் கழித்து இந்த 2019 ஆம் வருடத்தின் மே மாதத்தில் இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது.
எனவே இந்த உலக கோப்பை தொடருக்கான அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதே சமயத்தில் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சிறந்த வீரர்கள் தன் நாட்டிற்காக உலக கோப்பை தொடரில் விளையாட காத்திருக்கின்றனர். அவர்களின் பட்டியலைப் பற்றி இன்று விரிவாக காண்போம்.
#2) சுரேஷ் ரெய்னா:
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. இவர் திறமையான வீரர். எத்தனையோ முறை இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய சமயத்தில் இவரும், தோனியும் சேர்ந்து தான் பொறுமையாக நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளனர்.
இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் வல்லமை படைத்தவர். ஆனால் கடந்த இரண்டு வருடமாக இவர் சிறப்பாக விளையாடவில்லை. எனவே தொடர்ந்து அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். வருகின்ற ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற காத்திருக்கிறார்.
#1) யுவராஜ் சிங்:
வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களின் பட்டியலில் இவர் முதல் இடத்தில் உள்ளார். இவரும் ஒரு காலகட்டத்தில் இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடியவர். இவர் கடந்த இரண்டு வருடங்களாக சரியாக விளையாடவில்லை. எனவே தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். ஆனால் இந்தியா கடைசியாக 2011 ஆம் வருடம் உலக கோப்பையை வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் உலக கோப்பை தொடரில் இதுவரை 21 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 738 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.71 ஆகும். இந்த 21 உலக கோப்பை போட்டிகளில் ஒரு சதமும், ஏழு அரைச் சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற காத்திருக்கிறார்.
சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் தங்களது திறமையை வெளி காட்டியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும்.