தற்போது நமது இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பல திறமையான முன்னணி வீரர்களும், பல திறமையான இளம் வீரர்களும், இந்திய அணியில் பலர் உள்ளனர். எனவே சிறப்பாக விளையாடினால் மட்டும்தான் இந்திய அணியில் இடம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. ஒரு வீரர் சொதப்பினாலும் அவரது இடத்திற்கு விளையாட, பல வீரர்கள் தயாராக இருக்கின்றனர். எனவே தொடர்ச்சியாக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும்.
இவ்வாறு சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து இருந்த ரெய்னா, குறுகிய காலம் பெரிய அளவில் சிறப்பாக விளையாடவில்லை. எனவே அவர் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். ஆனால் தற்போது அவர் இந்திய அணியில் சேர முடியவில்லை. அதற்கு காரணம் அவரது இடத்திற்கு பல திறமையான வீரர்கள் அணியில் போட்டியாக உள்ளனர். இதனால் நான் தற்போது பார்மில் இருந்தாலும், இந்திய அணியில் என்னை சேர்க்கவில்லை என்று சுரேஷ் ரெய்னா வேதனையுடன் கூறியுள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு காண்போம்.
சுரேஷ் ரெய்னா என்றாலே அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மிக கடினமான கேட்சிகளையும் மிக எளிதான முறையில் பிடிப்பார். இந்திய அணியைப் பொறுத்தவரை, இவர் சிறந்த பீல்டர்களில் ஒருவர். ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும், விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நேரத்தில் பொறுமையாக நிலைத்து நின்று விளையாடும் திறமை படைத்தவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியில் 4 ஆவது பேட்டிங் வரிசையில் இவர் தான் நீண்ட காலமாக விளையாடி வந்தார்.
இவர் சரியாக விளையாடாத காரணத்தினால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற குழப்பம் இந்திய அணியில் உருவாகியது. சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் விளையாட, பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த வீரரும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தவில்லை. இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடுவிற்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, சிறப்பாக விளையாடினார் அம்பத்தி ராயுடு. எனவே இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடிய இடம், தற்போது அம்பத்தி ராயுடுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறியது என்னவென்றால், நான் சிறப்பாக விளையாடியும் என்னை அணியில் சேர்க்கவில்லை. இதற்காக நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. நான் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து விளையாடி வருகிறேன். நான் சிறப்பாக விளையாடி, விரைவில் இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்வேன். இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார். தற்போது இந்திய அணியில் 4 ஆவது பேட்டிங் வரிசையில் அம்பத்தி ராயுடுவும் மற்றும் 5 ஆவது பேட்டிங் வரிசையில் தோனியும் விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி நிரந்தர இடத்தை பிடித்துள்ளனர். எனவே சுரேஷ் ரெய்னாவிற்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.