இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹீர் அடுத்தாக இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் விடாலிட்டி டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் மே 14 அன்று உறுதி செய்துள்ளது. இந்த அணியில் ஆரோன் ஃபின்ச்-ற்கு பிறகு இரண்டாவது வீரராக வெளிநாட்டு வீரராக இணைந்துள்ளார்.
மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள ஐசிசி உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹீர் இடம்பெற்றுள்ளார். இதுவே இவரது கடைசி சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட் தொடராகும். உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு இம்ரான் தாஹீர் சர்ரே அணியில் இணைய உள்ளார். ஜீலை 19 அன்று தொடங்க உள்ள முதல் போட்டியில் சர்ரே அணி இசெக்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் முழுவதும் இம்ரான் தாஹீர் பங்கேற்க உள்ளார். விட்டாலிட்டி டி20 பிளாஸ்ட் 14 போட்டிகளை கொண்ட குறுப் ஸ்டேஜ் தகுதிச் சுற்றாகும். இம்ரான் தாஹீர் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் அந்த அணி பௌலிங்கில் வலிமையடைந்துள்ளது. இந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினால் கண்டிப்பாக தாஹீருக்கும் அந்த அணிக்கும் ஒரு சிறப்பான சீசனாக அமையும்.
இம்ரான் தாஹீர் கிரிக்கெட்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு புதுபுது சவால்களை எதிர்கொண்டு தகர்த்துக் கொண்டு வருகிறார். தற்போது அதிக கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் எனவும், உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என்பதுதான் இம்ரான் தாஹீரின் தற்போதைய நோக்கமாகும். சர்ரே அணியின் இயக்குனர் அலெக் ஸ்டேல்வார்ட், இம்ரான் தாஹீரை மிகவும் விரும்பி சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
" நான் புதுபுது சவால்களை எதிர்கொள்ள மிகவும் உற்சாகமாக உள்ளேன். கவுண்டி கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சர்ரே அணியில் விளையாடுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அலெக் ஸ்டேல்வார்ட் எனக்கு தந்த வாய்ப்பினை சரியான பயன் படுத்திக் கொள்வேன். சர்ரே ஒரு சிறந்த கவுண்டி கிரிக்கெட் அணி. அப்படிபட்ட அணியில் எனது பங்களிப்பை சிறப்பாக அளித்து கோப்பையை வெல்ல உதவியாக இருப்பேன்."
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை இம்ரான் தாஹீர் வெளிப்படுத்தினார். 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி 2019 ஐபிஎல் தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். தென்னாப்பிரிக்க வீரர் காகிஸோ ரபாடா 24 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் சுற்றிலிருந்து விலகினார். இம்ரான் தாஹீர் இறுதி போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தார். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டது. மும்பை இந்தியன்ஸ் தனது 4வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.