நேற்று பிக் பாஸ் தொடரில் நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சேர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நடுவரின் கவனக் குறைவால் பவுலர் ஒருவர் ஏழு பந்துகளை வீசினார். இதில் எதிர்பாராத விதமாக விக்கெட் விழுந்து விட்டது. இந்த கவனக்குறைவால் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது பிக் பாஸ் எனும் உள்ளூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பிக் பாஸ் தொடரில் நேற்று 30 ஆவது போட்டி நடைபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பெர்த் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சிட்னி சிக்ஸர்ஸ். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹெண்றிகியுஸ் 38 ரன்கள் விளாசினார். பெர்த் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆண்ட்ரூ டை 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெர்த் அணி. இந்த இலக்கை 19 ஓவர்களில் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான் கிராப்ட் 87 ரன்கள் விளாசினார். அவருடன் சேர்ந்து அணியின் கேப்டன் டர்னர் அரை சதம் விளாசினார். சிட்னி அணியில் சிறப்பாக யாரும் பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பெர்த் அணி 178 ரன்களை சேஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது ஓவரில் சிட்னி அணியின் பவுலர் எதிர்பாராத விதமாக ஏழு பந்துகளை வீசினார். இதில் சோகம் என்னவென்றால் அவர் வீசிய அந்த ஏழாவது பந்தில் பெர்த் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் கிளிங்கர் சிட்னி அணியின் விக்கெட் கீப்பர் கையில் கேட்ச் ஆனார்.
அந்த கேட்ச் அவுட்டா என்பதை இந்த போட்டியின் நடுவர் மறு பரிசீலனை செய்தார். அப்போது மறுபரிசீலனை செய்த மூன்றாவது நடுவர் இந்த பால் அவரது பேட்டில் பட்டு உள்ளது எனவே அவுட் என தீர்மானித்தார். ஆனால் இந்த விக்கெட்டில் சோகம் என்ன என்றால் மறுபரிசீலனை செய்த நடுவரும், மூன்றாவது நடுவரும் சிட்னி அணியின் பவுலர் 7 பந்துகளை வீசி இருக்கிறார் என்பதை சரியாக கவனிக்கவில்லை. அவர் 7 பந்துகளை வீசி இருக்கிறார் என்பதை 3வது நடுவர் கண்டுபிடித்தாலும் அதை சொல்வதற்கு அவருக்கு உரிமை இல்லை.
அவர் 7 பந்துகளை வீசி இருக்கிறார் எனவே இது நோபால் என அறிவிக்கும் உரிமை கிரவுண்டில் உள்ள நடுவருக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது கிரிக்கெட்டின் விதிமுறை. ஆனால் கிரவுண்டில் உள்ள நடுவரும் அவர் 7 பந்துகள் வீசி இருப்பதை கவனிக்கவில்லை. எனவே அவர் அவுட் கொடுத்ததால் பெர்த் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் கிளங்கர் வெளியேறினார். இந்த தவறான முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொள்ளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.